முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி. வளாகத்தில் தேசியக்கொடியை கொடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டம்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      இந்தியா
Parliament 2022 12-06

Source: provided

புதுடெல்லி: அதானி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பாஜகவினருக்கு ரோஜா, தேசியக் கொடி வழங்கி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு குறித்து அவையில் விவாதிக்கவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியும் எதிர்க்கட்சிகள் முழக்கமிடும் நிலையில், அதற்கு அவைத் தலைவர் மறுப்பதால் அதனைக் கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.

அதேபோன்று, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. நேற்று முன்தினம் மோடி, அதானி கேலிச் சித்திரங்கள் இடம்பெற்ற கறுப்பு நிறப் பையுடன் தர்னாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களுக்கு ரோஜா, தேசியக்கொடி வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் வேகமாக சென்று தேசியக்கொடியை வழங்கினர். ஆனால், ராஜ்நாத் சிங் அதனை வாங்க மறுத்துவிட்டார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. போராட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி. வர்ஷா கெய்க்வாட் 'இந்த நாட்டை விற்றுவிடாதீர்கள் என்று மத்திய பாஜக அரசை வலியுறுத்தவே அவர்களுக்கு தேசியக்கொடி வழங்குகிறோம். பதிலாக நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லுங்கள். அதானிதான் இந்த நாட்டை நடத்தி வருகிறார். அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது, ஏழைகளின் குரல் நசுக்கப்படுகிறது. நாட்டை விற்கும் இந்த சதிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்' என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து