முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை.யில் மகாதீபம் ஏற்றப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது : புவியியல் வல்லுநர்கள் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      ஆன்மிகம்
Thiruvannamalai 2023 04 04

Source: provided

தி.மலை : திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் அண்ணாமலையார் பாதம் உள்ள கொப்பரை வைக்கப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் வருகிற 13-ம் தேதி ஏற்றப்பட உள்ளது. அன்றைய தினம் திருவண்ணாமலைக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அண்ணாமலையார் மலையின் தன்மையை ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட புவியியல் வல்லுனர்கள் நேற்று முன்தினம்  திருவண்ணாமலை சென்றனர். 

இந்த நிலையில், வனத்துறை, வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் புவியியல்துறை அதிகாரிகள் 2,668 அடி உயரம் உள்ள மலைக்குச் சென்று நேற்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். 

மலையின் தற்போதைய நிலை, பாறைகள் மற்றும் மண்ணின் தன்மை குறித்து ஆய்வில் ஈடுபட்டனர். இதையடுத்து, 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் அண்ணாமலையார் பாதம் உள்ள கொப்பரை வைக்கப்படும் இடம் பாதுகாப்பாக உள்ளது என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மலையின் மீது ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை இன்று  தமிழக அரசிடம் அதிகாரிகள் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆய்வு அறிக்கை வெளியான பின்னரே வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபம் பிரம்மோற்சவம் விழாவின் போது மலையின் உச்சிக்கு 2000 பக்தர்களை அனுமதிப்பார்களா? இல்லையா? என்பது தெரியவரும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து