முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சையத் முஷ்டாக் அலி கோப்பை: அரையிறுதிக்கு மத்திய பிரதேசம், பரோடா, டெல்லி, மும்பை தகுதி

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      விளையாட்டு
11-Ram-51

Source: provided

பெங்களூரு: சையத் முஷ்டாக் அலி கோப்பை அரையிறுதிக்கு மத்திய பிரதேசம், பரோடா, டெல்லி, மும்பை அணிகள் தகுதிப் பெற்றுள்ளன.

காலிறுதிக்கு.... 

7-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களின் முடிவில் மும்பை, விதர்பா, டெல்லி, பரோடா, மத்திய பிரதேசம், சவுராஷ்டிரா, பெங்கால், உத்தரபிரதேசம் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன. இதில் நேற்று காலை நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிராவை வீழ்த்தி மத்திய பிரதேசம் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா 173 ரன்கள் எடுத்தது.

பரோடா - பெங்கால்... 

தொடர்ந்து 174 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய மத்திய பிரதேசம் 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அதேபோல், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பரோடா - பெங்கால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பரோடா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. பரோடா தரப்பில் அதிகபட்சமாக ஷஷ்வத் ராவத் 40 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 173 ரன் என்ற இலக்கை நோக்கி ஆடிய பெங்கால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 131 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஹர்திக் பாண்ட்யா.... 

இதன் மூலம் பரோடா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. பரோடா தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, லுக்மான் மேரிவாலா, அதிட் ஷெத் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இன்று நடைபெற்று வரும் மற்ற காலிறுதி ஆட்டங்களில் விதர்பா - மும்பை, டெல்லி - உத்தர பிரதேசம் அணிகள் ஆடி வருகின்றன.

174 ரன்னுக்கு அவுட்... 

கடைசி காலிறுதி ஆட்டத்தில் டெல்லி - உத்தரபிரதேசம அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 193 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் அதிரடியாக ஆடிய அனுஜ் ராவத் 33 பந்தில் 73 ரன்கள் எடுத்தார். உத்தரபிரதேசம் தரப்பில் மோஷின் கான், வினித் பன்வார், நிதிஷ் ராணா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 194 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய உத்தரபிரதேசம் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

4வது அணியாக... 

இதன் மூலம் 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி 4வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் வரும் 13ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது. அரையிறுதி ஆட்டங்களில் பரோடா - மும்பை (காலை 11 மணி), டெல்லி - மத்திய பிரதேசம் (மாலை 4.30 மணி) அணிகள் மோத உள்ளன. இறுதிப்போட்டி வரும் 15ம் தேதி பெங்களூருவில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து