முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது இடங்களில் கட்சி கொடிகள்: அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

மதுரை: பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் ஏன் அகற்றக் கூடாது என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை ஐகோர்ட் கிளையில் சித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை விளாங்குடியில் அ.தி.மு.க. கொடி கம்பம் வைப்பதற்கு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்ததாகவும், பட்டா இடங்களில் மட்டுமே கொடி கம்பம் அமைக்க அனுமதி வழங்க முடியும் என்று கூறி, அந்த மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே இடத்தில் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நடப்பட்டுள்ளதாகவும், அ.தி.மு.க.விற்கு மட்டும் பாரபட்சமாக கொடி கம்பம் அமைக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், எதிர் மனுதாரராக தமிழக காவல்துறை தலைவரை சேர்க்க உத்தரவிட்டார்.

மேலும் பொது இடங்களில் உள்ள அனைத்து கட்சி கொடி கம்பங்களையும் அகற்ற ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, தமிழகத்தில் கொடி கம்பங்கள் வைக்கப்பட்ட இடங்களில் எத்தனை விபத்துகள் நடைபெற்றுள்ளது? இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து