முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      தமிழகம்
Duraimurugan 2022 12 11

சென்னை, மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கனிம சுரங்க விவகாரத்தில் ஏல நடைமுறை திட்டம் சட்டம், ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என கடிதத்தில் குறிப்பிட்டேன். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என அக்டோபரிலேயே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினேன் . அரிட்டாப்பட்டி உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட பாரம்பரிய தளம் என்பதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அமைச்சகத்தால் ஏலம் மட்டுமே விட முடியும், குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்பதை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

மாநில அரசின் ஆட்சேபனையை மீறி மத்திய அரசு ஏலம் மேற்கொண்ட விவகாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் கொண்டு சென்றார். பிரதமரிடம் விவகாரம் கொண்டு செல்லப்பட்டதால் அரிட்டாப்பட்டியில் சுரங்கம் அமைக்கும் முடிவை அமைச்சகம் மறுஆய்வு செய்ய முடிவு. மறுஆய்வு செய்ய முடிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.ஆயிரக்கணக்கான மக்களின் நலன், சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு வழங்கிய சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து