முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வருகிறார்

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      தமிழகம்
Amit-Shah 3

சென்னை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக நாளை (27-ம் தேதி) சென்னை வர உள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் அமித்ஷா நாளை முக்கிய ஆலோசனை நடத்தும் அவர் மறுநாள் (28-ம் தேதி) திருவண்ணாமலை செல்கிறார்.

நாளை 27-ம் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை டெல்லியில் இருந்து சென்னை வரும் அமித்ஷாவுக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. அதன் பிறகு அவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுக்க உள்ளார். அதற்கு முன்னதாக அந்த நட்சத்திர ஓட்டலில் தமிழக பா.ஜ.க. தலைவர்களை அவர் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். இந்த கூட்டத்துக்காக தமிழக பா.ஜ.க. உயர்நிலை குழு உறுப்பினர்கள் தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

மூடப்பட்ட அறைக்குள் தமிழக பா.ஜ.க. உயர்நிலை குழு தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது. தற்போது தமிழக பா.ஜ.க. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த அமைப்பு தேர்தல் பற்றி அமித்ஷா ஆய்வு நடத்துவார் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வை அடி மட்டத்தில் இருந்து வலுப்படுத்தும் வகையில் எத்தகைய அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கூட்டத்தில் அமித்ஷா அறிவுறுத்துவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இது தவிர 2026-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர் தலில் பாரதீய ஜனதா எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றியும் மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டணி, பிரசாரம், கொள்கை பிரகடனம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழக பா.ஜ.க. உயர்நிலை குழு தலைவர்களுடன் ஆலோசனை முடிந்த பிறகு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா தனியாக பேசுவார் என்று தெரிகிறது. அதன் பிறகு அந்த ஓட்டலில் அமித்ஷா தங்கி ஓய்வு எடுக்கிறார்.

மறுநாள் (28-ந்தேதி) அமித்ஷா திருவண்ணாமலை செல்ல திட்டமிட்டு உள்ளார். திருவண்ணாமலையில் பா.ஜ.க. புதிய மாவட்ட தலைமை அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அந்த அலுவலக கட்டிடத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்க உள்ளார். அதன் பிறகு திரு வண்ணாமலை அருணாச லேஸ்வரர் ஆலயத்துக்கு அவர் செல்கிறார். அங்கு அவர் சிறப்பு வழிபாடுகள் செய்ய உள்ளார். அவருடன் தமிழக பா.ஜ.க. மூத்த தலை வர்களும் செல்ல உள்ளனர். திருவண்ணாமலை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா அன்று பிற்பகல் சென்னை திரும்புகிறார். சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

தமிழகத்துக்கு 2 நாள் பயணமாக வரும் மத்திய அமைச்சர் அமித்ஷா 28-ந்தேதி காலை கோயம்பேட்டில் விஜயகாந்த் குரு பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொள் வார் என்று கூறப்படுகிறது. அவரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பிரேம லதா சமீபத்தில் அழைத்த தாக தெரிகிறது. அந்த அழைப்பை ஏற்று அவர் அந்த விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் தமிழக வருகை நிகழ்ச்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவர் செல்லும் இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து