முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை வெளியீடு: ஜஸ்ப்ரிட் பும்ரா முதலிடம்

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

துபாய்: ஐசிசி தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன்செய்துள்ளார் ஜஸ்ப்ரிட் பும்ரா. மேலும் தரவரிசை பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 2-ம் இடத்திற்கு சரிந்துள்ளார்.

14 புள்ளிகள்... 

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பாக்ஸிங் டே டெஸ்ட்டுக்கு முன்பாக உத்வேகம் கிடைக்கும்படியாக ஐசிசி தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரிஸ்பேனில் 9 விக்கெட்டுகள் எடுத்து 14 புள்ளிகள் முன்னேறியுள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. அஸ்வினின் அதிபட்ச 904 புள்ளியை சமன்செய்துள்ளார். டிசம்பர் 2016இல் அஸ்வின் இந்த சாதனையை படைத்திருந்தார். கடந்த பிரிபேன் டெஸ்ட்டுடன் அஸ்வின் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

பாட் கம்மின்ஸ்... 

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வருமாறு., 1. ஜஸ்பிரீத் பும்ரா (இந்தியா) - 904 புள்ளிகள், 2. ககிசோ ரபாடா (தெ.ஆ) - 856 புள்ளிகள், 3. ஜோஷ் ஹேசில்வுட் (ஆஸி.) - 852 புள்ளிகள், 4. பாட் கம்மின்ஸ் (ஆஸி.) - 822 புள்ளிகள், 5. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 789 புள்ளிகள்,  ஹேசில்வுட் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார். பாட் கம்மின்ஸ், பும்ரா இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.

பேட்டிங் தரவரிசை...

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஜோ ரூட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. 4-வது போட்டி இன்று (டிச.26) மெல்போர்னில் நடைபெறுகிறது. இந்தியா சார்பாக விளையாடும் ஜெய்ஸ்வால் 4இல் இருந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றுமொரு இந்திய வீரர் ரிஷப் பந்த் 9இல் இருந்து 11-வது இடத்துக்கு சரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கடந்த டெஸ்ட்டில் முதல்முறையாக டாப் 10இல் இருந்து கீழிறங்கினார். பின்னர் பிரிஸ்பேன் டெஸ்ட்டில் சதம் அடித்து மீண்டும் டாப் 10 பட்டியலுக்குள் நுழைந்துள்ளார். டிராவிஸ் ஹெட் ஓரிடம் முன்னேறி 4-வது இடம் பிடித்துள்ளார். இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட், ஹாரி புரூக் முறையே முதலிரண்டு இடங்களை தக்கவைத்துள்ளார்கள். 

ரிஷப் பண்ட் 2-ம் இடம்....

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசைப் பட்டியல் வருமாறு., 1. ஜோ ரூட் - 895, 2. ஹாரி புரூக் - 876, 3. கேன் வில்லியம்சன் - 867, 4. டிராவிஸ் ஹெட் - 825 (ஓரிடம் ஏற்றம்), 5. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 805 (ஓரிடம் சரிவு), 10. ஸ்டீவ் ஸ்மித் - 721 (ஓரிடம் ஏற்றம்), 11. ரிஷப் பந்த் - 708 ( இரண்டிடம் சரிவு).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து