முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

37 மரண தண்டனை கைதிகளின் தண்டனை குறைப்பு: ஜோபைடன் நடவடிக்கைக்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      உலகம்
Trump

அமெரிக்கா, அமெரிக்காவில் 37 மரண தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்த அதிபர் ஜோ பைடனை, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் அபார வெற்றி பெற்றார். வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்த நிலையில், அமெரிக்க மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தற்போதைய அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பைடன் வெளியிட்ட அறிக்கையில், “குற்றவாளிகளின் செயல்களை வன்மையாக கண்டிக்கின்றேன். இவர்களின் செயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன். மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்பதில் முன்னெப்போதையும்விட நான் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜோ பைடனின் முடிவை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த டிரம்ப், ”மோசமான கொலையாளிகள் 37 பேரின் மரண தண்டனையை ஜோ பைடன் குறைத்துள்ளார். அவர்கள் ஒவ்வொருவரின் செயல்களை கேட்டால், அவர் இதைச் செய்தார் என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள். அமெரிக்க குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க பாலியல் வன்கொடுமையாளர்கள், கொலையாளிகள் மற்றும் அரக்கர்களுக்கு மரண தண்டனையை தீவிரமாக மேற்கொள்ள நீதித்துறைக்கு உத்தரவிடுவேன். சட்டம் மற்றும் ஒழுங்குள்ள நாடாக அமெரிக்காவை மீண்டும் மாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

செவ்வாயன்று மற்றொரு பதிவில், டிரம்ப் பதவியேற்றவுடன், அமெரிக்க குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை "வன்முறை கற்பழிப்பவர்கள், கொலைகாரர்கள் மற்றும் அரக்கர்களிடமிருந்து" பாதுகாக்க "மரண தண்டனையை தீவிரமாக தொடர" நீதித்துறைக்கு உத்தரவிடுவேன் என்று கூறினார். சிறையில் சக கைதிகளைக் கொன்ற 9 பேர், வங்கிக் கொள்ளையின் போது கொலை செய்த 4 பேர், சிறைக் காவலரைக் கொன்ற ஒருவர் உள்ளிட்டோருக்கு மரண தண்டனையை குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து