முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷித் விளையாட மாட்டார்?

புதன்கிழமை, 25 டிசம்பர் 2024      விளையாட்டு
25-Ram-58-1

Source: provided

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும், அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் இன்று புலவாயோவில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர வீரரான ரஷித் கான் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வெளியான தகவலின் படி, ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் ரஷித் கான் ஒரு தொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதால், ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். அதேசமயம் இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது ஆப்கானிஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக பார்க்கப்படுகிறது.

ரொனால்டோ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டநிலையில், பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பின்லாந்து நாட்டில் உள்ள லாப்லாந்தில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். 'சாண்டாகிளாஸ்' உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். மேலும், குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இது மிகவும் சிறப்பான நாள், மிகவும் வித்தியாசமானது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

கோலி குறித்து ரவி சாஸ்திரி

 விராட் கோலி பார்மில் இல்லை என்று நான் நினைக்கவில்லை என்றும், அவர் பார்மில் சற்று பின்தங்கி மட்டுமே இருக்கிறார் எனவும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்த ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி முதல் போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். ஆனால் அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளாக அவர் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். இந்த தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் அடித்தபோது முதல் பாதியில் நிதானத்துடன் ஒழுக்கமாக விளையாடியதால் இரண்டாவது பாதியில் அவருக்கு விருப்பமான சுதந்திரமான ஷாட்களை விளையாட முடிந்தது.

இதன் காரணமாக அவர் சதம் அடித்து பழைய பார்மிற்கு திரும்பினார். அதே போன்று விராட் கோலியும் நான்காவது போட்டியின் போது முதல் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆரம்பத்தில் நிதானத்துடன் ஒழுக்கமாக விளையாடினால் அதன் பிறகு அவரால் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியும். தற்போது அவர் பார்மில் இல்லை என்று நான் கூறவில்லை. ஏனெனில் விராட் கோலி போன்ற வீரர் பார்மில் சற்று பின்தங்கி இருக்கிறாரே தவிர அவர் பார்ம் அவுட் என்பதெல்லாம் கிடையாது. நிச்சயம் விராட் கோலியால் பெரிய இன்னிங்ஸை விளையாட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நமன் ஓஜாவின் தந்தைக்கு சிறை

கடந்த 2013-ம் ஆண்டு பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது இந்த வழக்கில் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு, மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் நகரத்தில் அமைந்துள்ள ஜோல்கேடா கிராமத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா கிளையில் ரூ.1.25 கோடி முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜா உட்பட 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட அபிஷேக் ரத்னத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 80 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. முன்னாள் கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தையும், அப்போது வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றியவருமான வினய் ஓஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியுடன் தொடர்புடைய இரண்டு தரகர்களான தன்ராஜ் பவார் மற்றும் லகான் ஹிங்வே ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து