முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்தால் பஞ்சாபில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      இந்தியா
Farmers 2024 11 20

Source: provided

சண்டிகர் : பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் விவசாய சங்கங்கள் நடத்தி வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை(எம்எஸ்பி)-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா(அரசியல் சார்பற்றது) மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய சங்கங்கள் நேற்று (திங்கள்கிழமை) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அந்த சங்கங்கள் அறிவிப்பு விடுத்திருந்தன. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஜக்கித் சிங் தலேவாலுக்கு ஆதரவாக இந்த பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து, பேருந்து போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஜலந்தர், மொஹாலி, ஷாம்பு உள்ளிட்ட பல மாநகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டிருந்ததால், வெளியூர் செல்லும் பயணிகளும், அலுவலகம் செல்வோரும் மோசமாகப் பாதிக்கப்பட்டனர். பந்த் காரணமாக பல பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

பயணிப்பதைத் தவிர்க்குமாறும் அல்லது இணைப்புச் சாலைகள் வழியாகச் சென்று அவர்கள் சேருமிடங்களுக்குச் செல்லுமாறும் போலீஸார் கேட்டுக் கொள்ளப்பட்டனர். மொஹாலி, பாட்டியாலா, லூதியானா, மோகா, ஃபெரோஸ்பூர், பதிண்டா, ஹோஷியார்பூர், ஜலந்தர் மற்றும் பிற இடங்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.  தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டத்தில் இணைவதாக பெரும்பாலான ஊழியர் சங்கங்கள், வர்த்தகர்கள் மற்றும் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளதாக விவசாய சங்கங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து