முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதி.மு.க.வினர் கைது: பிரேமலதா கண்டனம்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      தமிழகம்
Pramalatha 2023-07-24

Source: provided

சென்னை : தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினரின் கைதுக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வழக்கு விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் கைதான ஞானசேகரன் தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை என தி.மு.க. அமைச்சர்கள் விளக்கம் கூறியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை கைது செய்யவேண்டும் என்றும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அ.தி.மு.க. அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதில் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து அ.தி.மு.க.வினரின் கைதுக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகத் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கும் நிலையில், அவர்களை கைது செய்து ஜனநாயகத்தை அடக்கும் தி.மு.க. அரசின் இந்த செயல் நிச்சயமாகக் கண்டிக்கக்கூடிய விஷயம்.மாணவிக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக கடமை, இதைத் தமிழக அரசு தடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக ரீதியாகப் போராடுபவர்களைக் கைது செய்வதன் மூலம் அடக்கிவிடலாம் என்று இந்த அரசு மனக்கோட்டை கட்டக் கூடாது. இது தவறான முன் உதாரணம், இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் எல்லா உரிமையும் இருக்கிறது. எனவே கைது செய்தவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தே.மு.தி.க. சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து