முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்சிங் டே டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அபார வெற்றி

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      விளையாட்டு
Australia 2023-12-17

Source: provided

மெல்போர்ன் : பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

474 ரன்கள் குவிப்பு...

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. பாக்சிங் டே என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

340 ரன்கள் இலக்கு....

இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாக்சிங் டே டெஸ்ட்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஜெய்ஸ்வால் அபாரம்...

ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் ரன் எதுவும் எடுக்காமலும் (0 ரன்), கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரிஷப் பண்ட் 30 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஜடேஜா 2 ரன், நிதிஷ் குமார் 1 ரன், ஆகாஷ் தீப் 7 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிதானமாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் 84 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்தியா 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 155 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 184 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

சர்ச்சையான ஜெய்ஸ்வால் விக்கெட்

இந்த போட்டியில் 70-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் ஜெய்ஸ்வாலுக்கு பவுன்ஸ் பந்தை வீசினார். இதனை அடிக்க ஜெய்ஸ்வால் முற்பட்ட போது பந்து கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. உடனே நடுவரிடம் அவுட் என ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் கேட்டனர். இதனை நடுவர் நிராகரித்தார். உடனே கம்மின்ஸ் ரிவ்யூ கேட்டார். இதனையடுத்து 3-ம் நடுவர் இதனை சோதித்து அவுட் என தெரிவித்தார். இதனை சற்றும் எதிர்பாராத ஜெய்ஸ்வால் கள நடுவரிடம் முறையிட்டார். ஆனால் நடுவர் அவரை சமாதானப்படுத்தி அவுட் என கூறி வெளியேறுமாறு கூறினர். அல்ட்ரா எட்ஜ்-ல் அவுட் இல்லை என வரும்போது எப்படி 3-ம் நடுவர் அவுட் கொடுத்தார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து