முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

மெல்போர்ன் : டெஸ்ட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் 3-வது இந்திய வீரர் என்ற சேவாக்கின் (1462 ரன்கள்) வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள அவர் 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

369 ரன்களில் அவுட்...

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி நேற்று முடிவடைந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் சுமித் 140 ரன்கள் அடித்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சில் விளையாடிய இந்தியா 369 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 115 ரன்களும், ஜெய்ஸ்வால் 82 ரன்களும் குவித்தனர். பின்னர் 105 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 234 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக லபுஸ்சேன் 70 ரன்கள் அடித்தார்.

தனி ஆளாக...

இதனையடுத்து 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 155 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் தனி ஆளாக போராடிய ஜெய்ஸ்வால் 84 ரன்கள் அடித்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் இந்த வருடம் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1478 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் 3-வது இந்திய வீரர் என்ற சேவாக்கின் (1462 ரன்கள்) வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள அவர் 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

ஒரு வருடத்தில் அதிக ரன்கள்:

1. சச்சின் - 1562 ரன்கள்.

2. சுனில் கவாஸ்கர் - 1555 ரன்கள்.

3. ஜெய்ஸ்வால் - 1478 ரன்கள்.

4. சேவாக் - 1462 ரன்கள் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து