முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை கொலை செய்த இளைஞருக்கு மரண தண்டனை

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      தமிழகம்
Cort 2023 07-15

Source: provided

சென்னை : பரங்கிமலை ரயில் நிலையத்தில், கல்லூரி மாணவியை, ரெயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்த நிலையில், நேற்று தண்டன விவரத்தை வெளியிட்டுள்ளது.

பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷ் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாகவும் ஒரு கட்டத்தில் பெற்றோரின் கடும் எதிர்ப்பால் சதீஷுடன் பழகுவதை, பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாகவும் இதனால் சதீஷ் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2022-ம் ஆண்டு அக். 13-ம் தேதி கல்லூரிக்குச் செல்ல வழக்கம் போல பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு வந்த சத்யபிரியாவிடம் அங்கு நின்றிருந்த சதீஷ் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதில் சத்யபிரியாவை தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன் சதீஷ் தள்ளி விட்டு தப்பிச் சென்றார். இதில் சத்யபிரியா உயிரிழந்தார். இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், தலைமறைவாக இருந்த சதீஷை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது.

இவ்வழக்கின் விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதேவி முன் நடைபெற்று வந்தது. சிபிசிஐடி தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 70 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சதீஷுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என போலீஸ் தரப்பு வழக்குரைஞர் கேட்டுக் கொண்டிருந்தார். கடந்த 24-ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இளைஞர் சதீஷ் குற்றவாளி என்று  கடந்த 27-ம் தேதி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். அதாவது, நீதிபதி ஸ்ரீதேவி பிறப்பித்த தீர்ப்பில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார். சதீஷுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து