முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலின் வியட்னாம் பயணம்: பா.ஜ.க.வுக்கு காங்கிரஸ் பதில்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024-05-27

Source: provided

டெல்லி : ராகுலின் வியட்னாம் பயணம் குறித்து பா.ஜ.க. எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் பதில் அளித்துள்ளது.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் மறைந்து ஒரு சில நாள்களுக்குள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வியட்னாம் பயணம் மேற்கொண்டிருப்பதற்கு பா.ஜ.க. கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது. அதேவேளையில், மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை முறையாக ஏற்பாடு செய்யத் தவறிய மத்திய அரசு, கவனத்தை திசைத்திருப்பவே, ராகுல் மீது விமர்சனத்தை முன்வைப்பதாக காங்கிரஸ் பதில் கொடுத்துள்ளது. 

இந்த வார்த்தை மோதல், பா.ஜ.க.வின் தொழில் நுட்பப் பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ஒட்டுமொத்த நாடே முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு துக்கம் அனுசரித்து வருகிறது. ஆனால், ராகுல் காந்தி புத்தாண்டைக் கொண்டாட வியட்னாம் பறந்துவிட்டார். காந்தி குடும்பத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சீக்கியர்கள் என்றாலே பிடிக்காது என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் மாணிக்கம் தாக்கூர், பா.ஜ.க. இன்னமும் பிரித்தாலும் அரசியலைத்தான் செய்கிறது. எப்போது இந்த சங்கிகள் டேக் டைவர்ஷன் அரசியலை நிறுத்தப் போகிறார்கள்? யமுனைக் கரையில் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நடத்த அனுமதிக்காத மோடி மற்றும் அவரது அமைச்சர்கள், எவ்வாறு மன்மோகன் சிங்கின் குடும்பத்தினரை சுற்றிவளைத்தார்கள் என்பது வெட்கக்கேடானது என்று கூறியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் ராகுல் பயணம் மேற்கொண்டால், அது பற்றி பா.ஜ.க.வுக்கு என்ன கவலை இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும், மன்மோகன் சிங்கின் அஸ்தி கரைப்பு நிகழ்வில், காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்காதது ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பிய நிலையில், அவர்களது தனியுரிமைக்கு காங்கிரஸ் மரியாதை செலுத்துகிறது என்று பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து