முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 75 ஆயிரம் போலீசார் : சென்னையில் 19 ஆயிரம் போலீசார் குவிப்பு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      தமிழகம்
Poleis 2023-09-29

Source: provided

சென்னை : புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 75 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

புத்தாண்டையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் சென்னையில் பட்டாசு வடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிக்கு 75 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பைக் ரேஸைத் தடுப்பதற்காக 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.  இன்று (டிச. 31) மாலை முதல் மக்கள் கடலில் இறங்குவதோ, குளிப்பதோ கூடாது. மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள், மணல் ரோந்து வாகனங்கள் மூலமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்புக்காக 30 சாலை பாதுகாப்புக் குழுக்கள் இருசக்கர வாகனத்தில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர். சென்னையில் புத்தாண்டையொட்டி அனைத்து இடங்களிலும் 19,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 1,500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று இரவு 9 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து