முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கவர்னருடன் தேசிய மகளிர் ஆணையக்குழு ஆலோசனை

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      தமிழகம்
RN-Ravi 2023 04 05

Source: provided

சென்னை : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கவர்னர் ஆர்.என். ரவியுடன் தேசிய மகளிர் ஆணையக் குழு ஆலோசனை நடத்தியது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். அதன்படி, ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று மனு அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த தேசிய மகளிர் ஆணையம், மாணவியின் தகவல்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியே கசிந்ததற்கு தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சென்னை வந்த தேசிய மகளிர் ஆணையக் குழு நேற்று (திங்கள்) காலை அண்ணா பல்கலைக்கழகம் சென்று விசாரணையைத் தொடங்கினர்.

மம்தா குமாரி தலைமையிலான தேசிய மகளிர் ஆணையக் குழு, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில் கிண்டியில் கவர்னர் மாளிகைக்குச் சென்று கவர்னர் ஆர்.என். ரவியைச் சந்தித்துப் பேசியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கவர்னருடன் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. முன்னதாக கடந்த சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் கவர்னர் ஆர்.என். ரவி ஆய்வு மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து