முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் மருத்துவர் கொலை வழக்கு: எனது மகனை தூக்கிலிட்டாலும் வரவேற்பேன்: சஞ்சய் ராய் தாய்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      இந்தியா
Sanjay-Roy 2024-08-26

Source: provided

கொல்கத்தா : தனது மகனை நீதிமன்றம் தூக்கிலிட உத்தரவிட்டாலும்கூட அதனை தான் அகமகிழ்ந்து ஏற்பதாக, பெண் மருத்துவர் கொலை குற்றவாளி சஞ்சய் ராயின் தாயார் ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர். ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் முதுநிலை பயிற்சி மருத்தவராக இருந்த பெண் மருத்துவர் ஒருவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். ஒட்டுமொத்த நாட்டையும் இச்சம்பவம் உலுக்கியது. இந்த கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளிகளைக் கைது செய்து விரைந்து நீதி வழங்கிடக் கோரி நாடெங்கிலும்  குறிப்பாக மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பல நாள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக, காவல் துறை தன்னாா்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தது.  கொல்கத்தாவின் சியால்டா நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை   நிறைவடைந்ததைத் தொடா்ந்து  சம்பவம் நடைபெற்று 162 நாள்களுக்குப் பின்னா், வழக்கின் தீா்ப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது. அதில், ‘பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த சஞ்சய் ராய் குற்றவாளி’ என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்ற தீா்ப்பை குற்றவாளி சஞ்சய் ராயின் தாயாரும், கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாயாரும் வரவேற்றுள்ளனர்.

இது குறித்து சஞ்சய் ராயின் தாயார் கூறியிருப்பதாவது: “எனக்கு மொத்தம் 3 மகள்கள். அப்படியிருக்கையில், கொல்லப்பட்ட மருத்துவரின் பெற்றோர் அனுபவிக்கும் வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவனுக்கு (சஞ்சய் ராய்) எந்தத் தண்டனை வேண்டுமானாலும் கிடைக்கப் பெறட்டும். ஒருவேளை, அவனை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதனை ஏற்றுக்கொள்வேன்“ என்று ஆத்திரத்துடன் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் கூறுகையில், ‘சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், எனது மகள் கொலையில் மேலும் பலருக்குத் தொடா்புள்ளது. அவா்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கு முழுமையாக நிறைவடையவில்லை. வழக்கில் தொடா்புள்ள மற்றவா்களும் தண்டிக்கப்பட்ட பிறகே, வழக்கு முழுமையாக நிறைவடையும். அந்த நாளுக்காக நாங்கள் காத்திருப்போம்’ என்றாா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து