முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7 மாதங்களில் மட்டும் அயோத்தி ராமர் கோவிலில் 183 கோடி ரூபாய் காணிக்கை

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2025      ஆன்மிகம்
Ayodhya-temple 2024-02-16

புதுடெல்லி, அயோத்தி ராமர் கோவிலில் ஏழு மாதங்களில் ரூ.183 கோடி அளவில் காணிக்கைகள் பெறப்பட்டுள்ளன. இதில் வெள்ளி, தங்கம் மற்றும் ரொக்கம் அடங்கும்.

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்தஷேத்ரா எனும் அறக்கட்டளை அமைத்து ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை அமைந்தது முதல் கோவில் கட்டுவதற்காக பக்தர்கள் காணிக்கை குவியத் தொடங்கியது.

2024வது வருடம்  ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில்  மொத்தம் ரூ.183 கோடி மதிப்பிலான காணிக்கை பெறப்பட்டுள்ளது.  இத்துடன் கோவில் உண்டியல் உள்ளிட்ட வேறுபல வகைகளில் காணிக்கையாக ரூ.10 கோடி பெறப்பட்டுள்ளது.  இவை அன்றி வெள்ளியில் காணிக்கையான 94 கிலோ எடையில் கிடைத்துள்ளது.  

ராமர் கோவிலுக்கான அறக்கட்டளை அமைந்தது முதல் அதன் சொத்துக்களும் விரிவாக்கப்படுகின்றன. இந்தவகையில், சுமார் 37 ஏக்கர் நிலங்களை ரூ.328 கோடி விலையில் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களில் பக்தர்கள் வசதிக்காக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இதன்மூலம், அயோத்யாவின் ராமர் கோவிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்துசெல்ல இயலும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து