முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய படம் வெளியீடு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2025      சினிமா
Saif-Ali-Khan 2025-01-17

Source: provided

மும்பை : நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சயிப் அலிகான். கடந்த புதன்கிழமை இரவு அவரது வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் சயிப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சயிப் அலிகானை குடும்பத்தினர் மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சயிப் அலிகானின் உடலில் 6 இடங்களில் ஏற்பட்ட கத்தி குத்து காயங்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி நலமுடன் உள்ளார். இந்த விவகாரத்தில் தச்சு தொழிலாளி ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் இந்த சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இல்லை என்று தெரியவந்தது. இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளியை பிடிக்க போலீசார் இதற்காக 30 தனிப்படைகள் அமைத்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியவரின் புதிய புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். பாந்த்ரா ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவியில் கொள்ளையனின் காட்சிகள் பதிவாகி இருந்திருக்கிறது. அதனை தற்போது போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து