முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரந்தூர் செல்லும் த.வெ.க. தலைவருக்கு கட்டுப்பாடா? - காஞ்சிபுரம் எஸ்.பி. விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2025      தமிழகம்
Parandur-2024-06-15

Source: provided

சென்னை : பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்திக்க விஜய்க்கு எந்தவிதக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. கே.சண்முகம் தெரிவித்தார்.

விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திங்கள்கிழமை (ஜன. 20) சந்திக்க இருப்பதாக அந்தக் கட்சியின் மாநில பொருளாளர் வெங்கட்ராமன் கூறினார். இதற்காக அவர், கட்சி நிர்வாகிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. கே.சண்முகத்தை சனிக்கிழமை சந்தித்து, நடிகர் விஜய் பரந்தூரில் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரைச் சந்திக்க இருப்பதால் பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி மனு அளித்தார்.

பின்னர், அவர் கூறுகையில், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்க அந்தப் பகுதியைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராடி வருகின்றனர். குறிப்பாக, முற்றிலும் பாதிக்கப்படும் பரந்தூர் மக்கள் நீண்ட நாள்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திங்கள்கிழமை (ஜன. 20) காலை தவெக கட்சித் தலைவர் விஜய் விமான நிலைய எதிர்ப்புக் குழு நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளை ஏகனாபுரத்தில் சந்தித்து பேச உள்ளார். இந்தச் சந்திப்புக்கு காவல் துறை எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை. நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வர் என்றார்.

இது குறித்து காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் கூறுகையில், தேவையில்லாத நபர்கள், வெளி நபர்கள் அதிகம் வராமல் பார்த்துக் கொள்ளும்படியும், குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பை முடிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறோம். மற்றபடி எந்தவிதக் கட்டுப்பாடுகளோ, நிபந்தனைகளோ விதிக்கவில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து