முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை கிரிவலப்பாதையில் தர்காவா? அரசு விளக்கம்

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தர்காவா என்பது குறித்து தமிழக அரச விளக்கம் அளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை தர்கா விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. அந்த விவகாரம் பற்றிய அனல் இன்னும் அடங்காத சூழலில், திருவண்ணாமலை அண்ணாமலை யாருக்கு சொந்தமான கிரிவலப்பாதையில் புதிதாக தர்கா முளைத்துள்ளது. இப்போது தர்கா... அடுத்து வக்பு சொத்து... அடுத்து அந்த மலையே தர்காவுக்கு சொந்தம் என்று சொல்வார்கள்... என குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் இது முற்றிலும் பொய்யான தகவல். தர்கா அமைந்துள்ள இடமானது கோவிலுக்கு தொடர்புடையது அல்ல என்றும், சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தர்கா இருப்பதாகவும் திருவண்ணாமலை நகர நில அளவை பதிவேட்டின்படி தெரியவருகிறது. 

நகர கணக்கெடுப்பு பதிவேட்டில் குறிப்பு காலத்தில் மசூதி கட்டிடம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே சமூக வலைத்தளங்களில் கோவில் இடம் குறித்து பரவி வரும் தகவலானது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும் என்று அருணாசலேசுவரர் கோவில் செயல் அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்  என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து