முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா நன்றி

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2025      தமிழகம்
Adav-Arjuna 2024-12-11

Source: provided

சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இதனையடுத்து, அவர்  அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், த.வெ.க.வில் இணைந்தது குறித்து ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் உட்பட ஐந்து வரலாற்று நாயகர்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள 'தமிழக வெற்றிக் கழகத்தில்' மக்களுக்கான அரசியலை முன்வைத்து நான் கரம் கோர்த்துள்ளேன். தலைவர், முக்கிய நிர்வாகிகள், கட்சித் தோழர்கள் மற்றும் மக்கள் சக்தியுடன் இணைந்து மக்களுக்கான சனநாயகத்தை உருவாக்குவோம்.

'எல்லோருக்கும் எல்லாம்' என்ற மானுட மாண்பு, 'நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்ற அரசியலமைப்பு நெறி, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற உலக அறம் உள்ளிட்ட சமத்துவ, சமூகநீதி கொள்கைகளின் அடிப்படையில் என்றும் மக்களோடு பயணிப்பேன். மாபெரும் வரலாற்றுக் கடமைக்கான பயணத்தில் எனக்கு இந்த பொறுப்பு வழங்கிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சித் தோழர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து