முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.டி.ஜி.பி.யின் உயிருக்கு ஆபத்தா? - தமிழ்நாடு டி.ஜி.பி. ஜிவால் மறுப்பு

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2025      தமிழகம்
Shankar-Jiwal 2023 06 24

Source: provided

சென்னை : ஏ.டி.ஜி.பி.  கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வித சதி திட்டமும் இல்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதி திட்டமும் இல்லை என்றும்  டி.ஜி.பி.  சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து டி.ஜி.பி.  சங்கர் ஜிவால் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கூடுதல் டி.ஜி.பி.  அறையில் இருந்த காப்பர் வயர்கள் மூலம் தீப்பித்துள்ளது. அறையில் பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த எரிபொருளும் இல்லை என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த தீ விபத்தில் எவ்வித சதி திட்டமும் இருந்ததாக கண்டறியப்பட வில்லை. கூடுதல் டி.ஜி.பி.  கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதி திட்டமும் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி என்ன? - தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.  கல்பனா நாயக். இவர், கடந்த ஆண்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் ஐ.ஜி.யாக பணியாற்றினார். அப்போது, ஜூலை 28-ம் தேதி அவரது அலுவலக அறையில் திடீரென்று தீப்பிடித்தது. தீயணைப்பு த்துறையினர் விரைந்து வந்து அந்த தீயை அணைத்தனர். இவ்விபத்தில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.  சங்கர் ஜிவாலுக்கு, கல்பனா நாயக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘எனது அலுவலகம் தீப்பிடித்து எரிந்ததில் சதி திட்டம் உள்ளது. எனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் சதி திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள குறைபாடுகளை நான் சுட்டிக்காட்டியதால் இந்த சதி திட்டம் நடந்து இருக்கலாம் என்று நான் கருதுகிறேன். எனவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்ததாக தெரிகிறது.

ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தக் கடிதம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து, தமிழக அரசுக்கு எதிரான கண்டன குரல்களை பதிவு செய்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து