முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கன்வாடியில் பிரியாணி, சிக்கன் கேட்ட சிறுவனுக்கு அமைச்சர் பதில்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
Veena-George 2023 06 20

Source: provided

திருவனந்தபுரம் : கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன், தனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி வேண்டும் எனக் கேட்டதற்கு கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் பதிலளித்துள்ளார்.

கேரளத்தில் அங்கன்வாடியில் படிக்கும் ஷங்கு என்ற சிறுவன், 'எனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணியும் பொரித்த கோழியும் வேண்டும், அங்கன்வாடிகளில் உணவுப் பட்டியல் மாற்றப்பட வேண்டும்' என தன் தாயிடம் கேட்ட விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த விடியோவைப் பார்த்த கேரள சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சிறுவனின் கோரிக்கைக்கு பதில் அளித்து அவரும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் சிறுவன் ஷங்கு பேசிய விடியோவையும் பகிர்ந்துள்ளார்.

அமைச்சர் தனது விடியோவில், 'அப்பாவித்தனமாக சிறுவன் கோரிக்கை வைத்துள்ளான், ஷங்குவின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சிறுவனின் தாய் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வணக்கங்கள்.  குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வெவ்வேறு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது முட்டை, பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. சிறுவனின் கோரிக்கைக்கு ஏற்ப அங்கன்வாடியின் உணவுப் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும்' என்றார்.

இந்த விடியோவுக்குப் பின்னர் சிறுவன் ஷங்குவிற்கு பலரும் பிரியாணியும் சிக்கனும் வாங்கித்  தருவதாக சிறுவனின் தாய் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து