முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 70 தொகுதிகளில் இன்று ஒரே கட்ட வாக்குப்பதிவு மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா ஆம் ஆத்மி

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025
delhi 2025-01-21

Source: provided

புதுடெல்லி: டெல்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெற உள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினம் முடிவுகள் அறிவிக்கப்படும். தலைநகர் என்பதால் டெல்லியில் ஆட்சியை பிடிக்க ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் மொத்தம் 699 பேர் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் முதல்வரும், ஆளும் ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 பேர் போட்டியில் உள்ளனர். இந்நிலையில் பரபரப்பாக நடந்து வரும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதனால் இறுதிகட்ட பிரசாரங்கள் தீவிரமடைந்தன.

பிரதமர் மோடி ஆர்கே நகரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாடினார். மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். டெல்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், கடந்த 2 சட்டப்பேரவை தேர்தல்களில் பின்னடைவுகளைச் சந்தித்தது. கடந்த 2015 மற்றும் 2020 சட்டமன்றத் தேர்தல்களில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. அதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது. அதேபோல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடப்பதை உறுதி செய்யும் வகையில், பதற்றமான வாக்குச்சாவடிகள், டெல்லியின் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து