முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நபர் அமைப்பு அல்ல: கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      இந்தியா
Election

Source: provided

புதுடெல்லி : தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பு அல்ல என்று தங்கள் மீதான ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர்  அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வரும் 18-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதை சுட்டிக்காட்டி நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “தேர்தல் நடத்தை விதிகளை பா.ஜ.க. மீறுவதாகக் கூறப்படுவதை தேர்தல் ஆணையம் புறக்கணித்து வருகிறது. ஓய்வுக்குப் பிறகான அரசு பணியைப் பெறுவதற்காக ராஜீவ் குமார் பா.ஜ.க. மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.” என   குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், அவரது இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "டெல்லி தேர்தலை ஒட்டி இந்திய தேர்தல் ஆணையத்தை அவதூறு செய்ய வேண்டுமென்ற நோக்கிலும், அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலும் செயல்கள் நடைபெறுவதை 3 உறுப்பினர்களைக் கொண்ட ஆணையம் கூட்டாகக் கவனித்தது.

தேர்தல் ஆணையம் ஒரு நபர் அமைப்பு போல கருதிக் கொண்டு இத்தகைய செயல்கள் நடந்துள்ளன. அரசியலமைப்பு கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், புத்திசாலித்தனத்துடன் செயல்படவும், குற்றச்சாட்டுகளுக்கு அடிபணியாமல் இருக்கவும் முடிவு செய்துள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் நேற்று முன்தினம்நிறைவடைந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், “தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியிடம் சரணடைந்திருக்கும் விதத்தைப் பார்க்கும்போது, தேர்தல் ஆணையம் என்ற ஒன்று இல்லாதது போல தோன்றுகிறது. இது மிகப் பெரிய கேள்விகளை எழுப்புகிறது.

தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் இந்த மாதம் இறுதியில் ஓய்வு பெறுவது குறித்து மக்கள் மனதில் பல கேள்விகள் எழுவது நியாயமானதே. ஓய்வுக்குப் பின்பு அவருக்கு என்ன மாதிரியான பதவிகள் வழப்படும்? ஆளுநர் பதவியா அல்லது குடியரசுத் தலைவர் பதவியா? நான் ராஜீவ் குமாரிடம் இரு கரம் கூப்பி ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் கடமையைச் செய்யுங்கள், பதவிக்கான பேராசையை விட்டுவிடுங்கள். உங்களின் பதவிக் காலத்தின் இறுதியில் நாட்டை, நாட்டின் ஜனநாயகத்தை அழிக்காதீர்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து