முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.18.63 கோடி மதிப்பில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2025      தமிழகம்
DCM-2025-02-09

திருச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில்  ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்காவினை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று  திறந்து வைத்து பார்வையிட்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 18.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் 4.02 ஏக்கர் பரப்பளவில் திருச்சி பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன.  

திருச்சி பறவைகள் பூங்காவில் 60,000 சதுர அடி பரப்பளவில் ஐந்திணை என்றழைக்கப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் ஆகிய 5 வகை நில அமைப்புகளை விவரிக்கும் வகையில் அந்த நிலப்பகுதிகளுக்கான அடையாளங்கள் அமைக்கப்பட்டு, அங்கு பல்வேறு வண்ணங்களால் மனதை கொள்ளை கொள்ளும் வகையிலான நூற்றுக்கணக்கான பறவைகள் விடப்பட்டுள்ளன.  பறவைகள் தங்குவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட குடில்கள் மற்றும் கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சுருள் ரெக்கை , பொமேரியன் பெளட்டர் , கேடய பௌட்டர் , கிளி மூக்கு , வைர புறா , நீண்ட முகம் டம்ளர் , கட்ட வால் , ஓரியண்டல் பிரில் , பூ ரெக்கை உள்ளிட்ட  புறா வகைகள் தனித்தனியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையான அழகிய கோழியினங்கள், நெருப்புக்கோழிகள், ஈமுக்கள் தனியாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பல வகை வாத்துகள், பலவகை கிளிவகைகள், பலவகை குருவிகள் தனித்தனியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  

திருச்சி பறவை பூங்காவில் கூடுதலாக 7டி மினி திரையரங்கில் பார்வையாளர்களுக்கு திரையிடப்படும் படங்கள் முப்பரிமாண காட்சிகளாக அருகில் தெரிவதுடன், காட்சிகளின் அமைப்பிற்கு ஏற்ப தங்களைச் சுற்றி ஈரமாக உணர்வது, தங்கள் உடலை காற்று தழுவுவது, அதிர்வுகளை உணர்தல் உள்ளிட்ட சிறப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இத்திரையரங்கில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் 50 பேர் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை ஆர்வலர்கள், செல்லப்பிராணி ஆர்வலர்கள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இந்த பறவைகள் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவினை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (9.2.2025) திறந்து வைத்தார். இந்த திருச்சி பறவைகள் பூங்கா தமிழ்நாட்டின் அனைத்து பகுதி சுற்றுலா பயணிகளுக்கும் ஒரு வரப் பிரசாதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து