முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 38 பேர் திடீர் பணியிட மாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழ்நாட்டில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். கோவை, தேனிக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது., கைத்தறி இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணைய மேலாண்மை இயக்குநராக அண்ணாதுரை, கூட்டுறவு, உணவு, நுகர்பொருள் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலராக சத்யபிரத சாகு, தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவுச் சங்க பதிவாளராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் தமிழ்நாடு மின்விசை உற்பத்தி மேலாண்மை இயக்குனராக ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனராக அன்சுல் மிஸ்ரா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலராக பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக கிராந்தி குமார் பாடி, கோவை மாவட்ட ஆட்சியராக பவன் குமார், தேனி மாவட்ட ஆட்சியராக ரஞ்சித் சிங், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக மதுமதி, உயர்கல்வித்துறை செயலராக சமயமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலராக மணிவாசன், பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலராக சந்திரமோகன், மனிதவள மேலாண்மைத்துறை செயலராக கோ.பிரகாஷ், பொதுப்பணித்துறை செயலராக ஜெயகாந்தன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து