முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2025      சினிமா
Ajith-2025-02-09

சென்னை, நடிகர் அஜித் குமார் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படங்களுக்கு நடுவே நடிகர் அஜித் குமார் வீனஸ் மோட்டர்ஸ் டூர்ஸ் என்கிற தன் இருசக்கர பயண நிறுவனத்தைத் துவங்கினார். இருசக்கர வாகனத்தில் தொலை தூரப் பயணங்களைத் திட்டமிடுபவர்களுக்கான தளமாக இது செயல்பட்டுவருகிறது. இதைத் தொடர்ந்து 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற கார் பந்தயத்திற்காக சர்வதேச அளவிலான வீரர்களை ரேஸிங்கில் ஈடுபட வைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

அண்மையில், துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தினார். தற்போது, ஸ்பெயினின் பார்சிலோனா கார் பந்தயத்தில் பங்கேற்பதற்காக அங்கு தன் குழுவினருடன் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அஜித், “எங்களுக்கு மற்றுமொரு நல்ல நேரம் அமைந்துள்ளது. இங்கு பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கினேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. விபத்து நடந்ததும் குழுவினர் விரைவாக செயல்பட்டு மீட்டனர். தற்போது, மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.” என்றார்.

முன்னதாக, துபாயில் பயிற்சியின்போது அஜித்தின் கார் விபத்தில் சிக்கி நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து