முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரீன்லாந்தில் தேர்தல்: அமெரிக்காவுடன் இணைய வாக்காளர்கள் விருப்பம்..?

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      உலகம்
America 2024-04-22

Source: provided

அமெரிக்கா : கிரீன்லாந்து வாக்காளர்கள் பலரும் அமெரிக்காவுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக சமீபத்திய கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது.

ஐரோப்பிய கண்டத்தின் ஓர் அங்கமான கிரீன்லாந்து தீவு, டென்மாா்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமாக திகழ்கிறது. பரபரப்பான அரசியல் சுழலில் சிக்கியுள்ள கிரீன்லாந்தில் தோ்தல் நடைபெற விருக்கிறது. பனிப் பிரதேசமான கிரீன்லாந்தின் மொத்த மக்கள்தொகை 57 ஆயிரம் மட்டுமே. அவர்களில் 40,500 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள். இனாட்சிசார்டுட் என்றழைக்கப்படும் கிரீன்லாந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மொத்தமுள்ள 31 இடங்களில் 16 இடங்களை ஒரு கட்சி கைப்பற்றியாக வேண்டும். 

பரபரப்பான இந்த அரசியல் சூழலில், கிரீன்லாந்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பெரும்பாலான வாக்காளர்கள் டென்மார்க்கிடமிருந்து பிரிந்து சுதந்திர தேசமாக தாங்கள் திகழ வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமல்லாது, சற்றே ஆச்சரியமளிக்கும் விதமாக, வாக்காளர்கள் எண்ண ஓட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கருத்துக்கணிப்புகள் மூலம் அறிய முடிகிறது. டொனால்ட் டிரம்ப்புடன் இணக்கமாக இணைந்து பணியற்றினால் தங்கள் பகுதிக்கு சர்வதேச அச்சுறுத்தல்களிலிருந்து உரிய பாதுகாப்பும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமும் ஏற்படுமென்று இப்போது எண்ணுகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து