முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூகுளைவிட 10 லட்சம் மடங்கு வேகம்: புதிய கணினியை அறிமுகம் செய்த சீனா

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      உலகம்
China 2024 07 31

Source: provided

சீனா : கூகுளைவிட 10 லட்சம் மடங்கு அதிவேக கணினியை அறிமுகம் செய்த சீனா.

சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கும் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (யூஎஸ்டிசி) ஆராய்ச்சிக் குழு, 105 க்யூபிட் மற்றும் 182 கப்ளர் ப்ராஸசரை பயன்படுத்தி ஜுச்சோங்ஷி - 3 என்ற குவாண்டம் கணினியைக் கண்டுபிடுத்துள்ளனர். வியக்கத்தக்க வேகத்தில் இயங்கும் ’ஜுச்சோங்ஷி - 3’, தற்போதைய மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கணினியைவிட 10 ஆயிரம் டிரில்லியன் (10 பவர் 15) வேகத்திலும், கூகுள் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட குவாண்டம் கணினியைவிட 10 லட்சம் மடங்கு வேகமாக இயங்குகிறது.

2019-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் 53 க்யூபிட் சைகாமோர் ப்ராஸசரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட குவாண்டம் கணினியானது, அந்த சமயத்தில் உலகில் அதிவேகமாக இயங்கிய சூப்பர் கணினி 10,000 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை வெறும் 200 வினாடிகளில் செய்தது. 2023-ம் ஆண்டு சீனாவின் யூஎஸ்டிசி ஆராய்ச்சியாளர்கள் 1,400 ஏ100 ஜிபியூ ப்ராஸசரை பயன்படுத்தி, கூகுளின் குவாண்டம் கணினி 200 வினாடிகளில் செய்த பணிகளை வெறும் 14 வினாடிகளில் செய்து முடித்தது. மேலும், விரிவாக்கப்பட்ட மெமரியுடன் கூடிய ஃபிராண்டியர் சூப்பர் கணினிகள் இதே பணியை 1.6 வினாடிகளில் செய்தது.

இதனிடையே, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் சீனாவின் யூஎஸ்டிசி ஆராய்ச்சியாளர்கள் ஜுச்சோங்ஷி 1 மற்றும் 2 ஆகிய குவாண்டம் கணினிகளை கண்டுபிடித்தனர். கடந்தாண்டு 67 க்யூபிட் சூப்பர் கண்டெக்டிங் ப்ராஸசரை பயன்படுத்தி உலகின் அதிவேக குவாண்டம் கணினியை கூகுள் நிறுவனம் கண்டுபிடித்திருந்த நிலையில், சீன ஆராய்ச்சியாளர்கள் அந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து