முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுமுறைப் பயணமாக அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட் இந்தியா வருகிறார்

செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2025      உலகம்
USA 2025-03-11

Source: provided

அமெரிக்கா : அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துளசி கப்பார்ட் அரசுமுறைப் பயணமாக இந்தியாவிற்கு வரவுள்ளார்.

அமெரிக்காவின் அனைத்து உளவு அமைப்புகளின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் தலைமைப் பதவியான தேசிய உளவுத்துறை தலைவர் பொறுப்பில் ஹவாய் 2-ஆம் மாவட்டத்துக்கான முன்னாள் பிரதிநிதிகள் சபை உறுப்பினா் துளசி கப்பாா்ட் கடந்த நவம்பரில் நியமிக்கப்பட்டார். இவர் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ஜப்பான், தாய்லாந்து, இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுபயணம் மேற்கொள்ளவிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தோ - அமெரிக்க பிராந்தியத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசின் நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக, இந்த பயணத்தின் மூலம் ’நாடுகளிடெயே உறவுகளை மேம்படுத்தவும், தொடர்புகளை விரிவாக்கவிருப்பது' குறித்தும் துளசி கப்பார்ட் குறிப்பிட்டார். கடந்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிந்தபோது உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்ட்டை சந்தித்ததைத் தொடர்ந்து அவர் இந்த மாதம் இந்தியாவிற்கு வரவுள்ளார்.

அமெரிக்கா, இந்தியா இடையே உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையின் வளர்ச்சி, ஒத்துழைப்பு குறித்து அவர் இந்திய அதிகாரிகளுடன் விவாதிக்க விருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் வருகை குறித்த கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து