எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தமிழ்நாடு காவல்துறை எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பேச அனுமதித்தீர்கள்...
சட்டம்-ஒழுங்கு தொடர்பாக காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி, விதிமுறைகளின்படி அனுமதி கேட்காவிட்டாலும், நீங்கள் அவரைப் பேச அனுமதி தந்தீர்கள். நீங்கள்கூட அனுமதி தருவதற்கு யோசித்தீர்கள். ஆனால், நான் உங்களிடம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், நீங்கள் அதை ஏற்றுக் கொண்டு அவரைப் பேச அனுமதித்தீர்கள். அதைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் முறையாகப் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஏனென்றால், நான் பதிலளிக்கும்போது, வேறு ஏதாவது விஷயங்களை நான் எடுத்துச் சொல்லிவிடுவேன் என்று பயந்துகொண்டு, இன்றைக்கு அவர்கள் (எதிர்க்கட்சியினர்) வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இருந்தாலும், நான் அவர்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கொலை சம்பவம்....
நேற்று (நேற்று முன்தினம்) நான்கு கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கே தெரிவித்தார்கள். கோவை சம்பவத்தைப் பொறுத்தவரையில், முதற்கட்டமாக தற்கொலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சம்பவத்தைப் பொறுத்தவரையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கையில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து விசாரித்ததில், குடும்பத் தகராறு எனத் தெரியவந்துள்ளது. ஈரோட்டில் நடைபெற்ற சம்பவம் குறித்து நான் இப்போது விரிவாகச் சொல்ல விரும்புகிறேன்:- சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஜான் (எ) சாணக்கியன் என்பவர் ஐகோர்ட் நிபந்தனை பிணையின் அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று (நேற்று முன்தினம்) கையொப்பமிட்டுவிட்டு, தன்னுடைய மனைவியுடன் காரில் திருப்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் காரில் சென்ற அடையாளம் தெரியாத சிலர் இருவரையும் அரிவாளால் தாக்கிவிட்டுச் தப்பிச் சென்றிருக்கிறார்கள். காயமடைந்த சாணக்கியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
பாதுகாப்பிற்காக...
அவரது மனைவி, சித்தோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தகவலறிந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, இதில் தொடர்புடைய கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சரவணன், சதீஷ், பூபாலன் மற்றும் மைனா கார்த்திக் ஆகியோரை பச்சப்பாளி என்ற இடத்தில் அவர்களது காரை மறித்து கைது செய்ய முயற்சி செய்தபோது, சதீஷ் உள்ளிட்டோர் காவல் துறையினரை கொடிய ஆயுதங்களால் தாக்கினர். இதனால் சித்தோடு காவல் ஆய்வாளர் பாதுகாப்பிற்காக அவங்களை நோக்கிச் சுட்டிருக்கிறார். இதில் சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, சதீஷ் உள்ளிட்ட நான்கு பேரும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
விசாரணை மேற்கொண்டு....
கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி செல்லதுரை கடந்த 2020 ஆம் ஆண்டு சேலம் மாநகரில் கொலை செய்யப்பட்ட வழக்கில், சாணக்கியன் இரண்டாவது எதிரி என்பதால், அதற்குப் பழிவாங்குகிற நோக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து இங்கு சில கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் போகிற போக்கிலே சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். இவை குறித்த புள்ளிவிவரங்களோடு இந்த அவைக்கு சிலவற்றை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
பாரபட்சமும் இல்லை...
காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட்டு, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எந்தவிதமான பாரபட்சமும் இதில் காட்டப்படுவதில்லை. குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள் ஒருபுறம்; குற்றச் சம்பவங்கள் நிகழாமல் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மறுபுறம் என இரு வகையிலும் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் கூலிப்படையினர் எனக் கருதப்படுவோரின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தேவையான இனங்களில் குண்டர் சட்டத்தின் கீழும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குண்டர் சட்டத்தில் கைது...
கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் 4 ஆயிரத்து 572 சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, 2023-ம் ஆண்டு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் 49 ஆயிரத்து 280 ஆக இருந்தது; 2024 ஆம் ஆண்டில் அது 31 ஆயிரத்து 498 ஆகக் குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 782 குற்றங்களைக் குறைத்திருக்கிறோம். சில கொலைக் குற்றங்கள் நடைபெறும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளிவரும்போது அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றது.
முந்தைய ஆட்சியில்...
உண்மையில் எண்ணிக்கையின் அளவில் பார்க்கும்போது, 2024-ம் ஆண்டில் கொலைக் குற்றங்கள் 6.8 விழுக்காடு குறைந்திருக்கின்றன. அதாவது, முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 109 கொலைகள் குறைந்திருக்கின்றன. அதேபோல், பழிக்குப் பழி வாங்கும் கொலைகளின் எண்ணிக்கையும் 2024-ம் ஆண்டில் 42.72 விழுக்காடு குறைந்துள்ளது. இறுதியாக ஒரேயொரு புள்ளிவிவரத்தை மட்டும் தங்கள் வாயிலாக இந்தப் பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2012 முதல் 2024-ம் ஆண்டுவரை நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அதாவது, 2012-ம் ஆண்டு நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,943. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக மிக அதிகமான எண்ணிக்கை. 2013-ம் ஆண்டு நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,927. கொரோனா காலத்திலும், லாக்-டவுன் இருந்தபோதும், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2020-ம் ஆண்டில் நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,661.
கொலைகள் குறைந்துள்ளன...
கடந்த ஆண்டுகளின் வரலாறு இவ்வாறு இருக்க, தற்போது நமது ஆட்சிக் காலத்தில் காவல் துறை மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 12 ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டில்தான் மிக, மிகக் குறைவான எண்ணிக்கையில், அதாவது, 1,540 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன; இதுதான் உண்மை. இதை நடுநிலையாளர்களும், பொது மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். குற்றங்களைத் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பொது அமைதியைத் தொடர்ந்து நிலைநாட்டிட தமிழ்நாடு காவல் துறை எனது தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்விரோதம் காரணமாக நடைபெறும் சில நிகழ்வுகளை வைத்து, இந்த அரசின் மீது பழி சுமத்தி அரசியல் ஆதாயம் அடைய நினைப்போர் சென்ற ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி சீரழிந்து கிடந்தது என்பதை நான் இங்கே தெரிவித்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
மின்பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: செந்தில் பாலாஜி எச்சரிக்கை
20 Mar 2025சென்னை: மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
தெலுங்கில் கேள்வி எழுப்பிய போதும் திரும்பி பார்க்காத பொள்ளாச்சி ஜெயராமன் அமைச்சர் கே.என். நேரு நகைச்சுவை
20 Mar 2025சென்னை: நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழிலும், தெலுங்கிலும் பேசி வாய்ப்பு கேட்ட போதிலும் பொள்ளாச்சி ஜெயராமன் எங்களை பார்த்தது கூட இல்லை என அமைச்சர் கே.என்.
-
காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்: பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு
20 Mar 2025டெய்ர் அல் பலாஹ்: காசா மீது இஸ்ரேல் நடத்தி தீவிர தாக்குதலில் பலி எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
-
22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை:பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு
20 Mar 2025புதுடெல்லி: சத்தீஸ்கரில் நடைபெற்ற இருவேறு மோதல்களில் 22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், இந்த நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளா
-
பதற்றம் தணியாததால் நாக்பூரில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
20 Mar 2025நாக்பூர்: வன்முறை நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
-
ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு
20 Mar 2025சென்னை: ஞானசேகரன் மீது மேலும் ஒரு திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பான வேல்முருகன் பேச்சு:முதல்வர் கண்டனம்
20 Mar 2025சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் வேல்முருகன் பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார்
20 Mar 2025சென்னை: தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.
-
சேலம் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை
20 Mar 2025ஈரோடு: ஈரோட்டில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
அமைச்சர் மீது சேற்றை வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்
20 Mar 2025சென்னை: அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு 118-வது இடம்
20 Mar 2025வாஷிங்டன்: உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20-ம் தேதி (நேற்று) கொண்டாடப்பட்டது. இதில் உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில்
-
நாக்பூர் வன்முறை குற்றவாளிகளை பிடிக்க 18 சிறப்பு குழுக்கள்: காவல்துறை தகவல்
20 Mar 2025மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரத்தில் நடந்த வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 18 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா ஒப்புதல் வெள்ளை மாளிகை தகவல்
20 Mar 2025வாஷிங்டன் டி.சி: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா ஒப்பு கொண்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
-
வரும் 30-ம் தேதி முதல் மதுரை-விஜயவாடா இடையே விமான சேவை தொடக்கம்
20 Mar 2025மதுரை: மதுரை-விஜயவாடா இடையே வருகிற 30-ம் தேதி முதல் விமான சேவை தொடங்கப்படுகிறது.
-
ராஜஸ்தான் கேப்டன் ரியான்
20 Mar 2025இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
-
1,200 பணியிடங்களை நிரப்ப மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் சிறப்பு தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் அறிவிப்பு
20 Mar 2025சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
-
வனங்களில் சாலை அமைக்க முதல்வர் உத்தரவு: அமைச்சர் பொன்முடி தகவல்
20 Mar 2025சென்னை: வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
-
டாஸ்மாக் சோதனை விவகாரம்: வரும் 25-ம் தேதி வரை நடவடிக்கை கூடாது அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
20 Mar 2025சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25-ம் தேதி வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்
-
தரமணியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு உறுதி
20 Mar 2025சென்னை: தரமணி பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்தார்.
-
போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு ஏப். 21 வரை விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
20 Mar 2025சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்திய வீரர்களுக்கான கட்டுப்பாடுகளில் எந்த மாற்றம் இல்லை: பி.சி.சி.ஐ. அதிரடி
20 Mar 2025மும்பை: வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் தங்குவது குறித்த பி.சி.சி.ஐ. கட்டுப்பாட்டில் மாற்றமில்லை என அதன் செயலாளர் தேவஜித் சைகியா அறிவித்துள்ளார்.
-
பார்லி. மக்களவைக்கு டி-சர்ட் அணிந்து வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்
20 Mar 2025புதுடெல்லி: பாராளுமன்றத்தின் மக்களவைக்கு எம்.பி.க்கள் டி-சர்ட் அணிந்து வந்ததால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
-
நீர்வரத்து 1,500 கனஅடியாக நீடிப்பு: ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
20 Mar 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
20 Mar 2025சென்னை: மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.&n
-
பேரிடர் பட்டியலில் வெயில் தாக்கத்தை சேர்க்க வேண்டும் மத்திய அரசுக்கு பாராளுமன்றக்குழு பரிந்துரை
20 Mar 2025புதுடெல்லி: மத்திய அரசு தனது பேரிடர் மேலாண்மைத் திட்டங்களில் வெப்ப அலைகள் போன்ற "புதிய மற்றும் வளர்ந்து வரும்" பேரிடர்களைச் சேர்க்க வேண்டும் என்று பாராளுமன்றக் குழு பரி