முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். விதியால் ஆல் ரவுண்டர்கள் பாதிப்பு: ஹர்திக் பாண்டியா வேதனை

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      விளையாட்டு
20-Ram-53

Source: provided

மும்பை: ஐ.பி.எல். தொடரில் பயன்படுத்தும் இம்பேக்ட் பிளேயர் விதியால் ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு என ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

ஐ.பி.எல். தொடர்...

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இம்பேக்ட் பிளேயர் விதி...

இந்த நிலையில் , ஐ.பி.எல். தொடரில் பயன்படுத்தும் இம்பேக்ட் பிளேயர் விதி தொடர்பாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது, இம்பேக்ட் பிளேயர் விதி முறையால் ஆல்ரவுண்டர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் நீங்கள் ஒருநாள் போட்டி ஆல்ரவுண்டராக இல்லையெனில் உங்களது இடத்தைப் பிடிப்பது கடினமாக இருக்கிறது. 

கூடுதல் உழைப்பு... 

காலப்போக்கில் இது எல்லாம் மாறுமா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், நிச்சயமாக ஆல்ரவுண்டர்கள் அவர்களது இடத்தைப் பிடிக்க வேண்டுமானால் கூடுதலாக உழைக்க வேண்டும்.என தெரிவித்தார் . ஐ.பி.எல். போட்டியில் கடந்த 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து