முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் கேப்டன் ரியான்

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜொப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. அதனால் விரலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த அறுவைச் சிகிச்சையினால் முதல் 3 போட்டிகளில் கீப்பிங், கேப்டன் பொறுப்பிலிருந்து சாம்சன் விலகுவதாகக் கூறப்பட்டுள்ளது. என்.சி.ஏ.வில் உள்ள மருத்துவர்கள் விக்கெட் கீப்பிங்கில் இருந்து சஞ்சு சாம்சனுக்கு சிறிது ஓய்வு தேவை என அறிவுறுத்தியுள்ளார்கள். இம்பாக்ட் பிளேயர் விதியின்படி பேட்டராக மட்டுமே சாம்சன் தொடர்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

 23 வயதாகும் ரியான் பராக் தற்போது இளம் கேப்டனாக இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கிறார். இதற்கு முன்பு விராட் கோலி 22 வயதில் ஆர்.சி.பி. அணியை தலைமை ஏற்றது குறிப்பிடத்தக்கது. பயிற்சி ஆட்டத்தில் ரியான் பராக் அரைசதம் அடித்துள்ளார். பேட்டிங், பீல்டுங்கில் அசத்தும் பராக் பந்துவீசுவதும் குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணி தனது முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை மார்ச் 23-ல் எதிர்கொள்ளவிருக்கிறது.

சஹால் - தனஸ்ரீ விவாகரத்து 

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ வர்மா, பாடல் நிகழ்ச்சிகளில் பாடகியாக அறிமுகமாகினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீக்கு கிடைத்து நடன போட்டிகளிலும் ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக தகவல் வெளியாகி கொண்டே இருந்தன. 

இந்த நிலையில், இருவரும் பரஸ்பரமாக பிரிய முடிவெடுத்து விவகாரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும், மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்கவிருப்பதால், அதற்கு முன்னதாக அவரது வழக்கை முடித்து வைக்க அவரது வழக்குரைஞரும் கோரிக்கை வைத்தார். அதன்படி, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் கொடுக்க சஹால் ஒப்புக் கொண்டார். இதனால், இருவருக்கும் விவாகரத்து வழங்கி மும்பை குடும்ப நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

புகழ் பரப்பும் ப்ராவோ

கௌதம் கம்பீருக்குப் பதிலாக கே.கே.ஆர். அணியின் ஆலோசகராக முன்னாள் மே.இ.தீ. வீரரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான டிவைன் ப்ராவோ நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ப்ரோவோ பேசியதாவது: கே.கே.ஆர். அணியில் சாம்பியன்களுக்கான மனநிலையை கொண்டு வருவேன். நான் வெற்றிப் பெறுவதை நம்புகிறேன். என்னுடைய சாதனைகள் அவர்களுக்காக பேசும். ஆனால், முடிவாக அடுத்த தலைமுறை கிரிக்கெட்டர்களை அவர்களது வழியிலேயே சாம்பியன்களாக்க உதவ வேண்டும். கே.கே.ஆர். அணி மீது உலகம் முழுவதும் நன்மதிப்பு இருக்கிறது. நான் விளையாடும்போது கே.கே.ஆரில் சில வீரர்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இந்த அணியில் இணைவது மகிழ்ச்சி. டிரினிடாட் & டொபாக் அணியில் கேப்டனாக இருப்பது அதிர்ஷடமானது. உலகம் முழுமைக்கும் கே.கே.ஆர். அணியின் புகழினை கொண்டுச் செல்வதில் உறுதியாக இருக்கிறேன். வெற்றிக்குக் காரணம் போட்டி மீதான ஆர்வமே. இந்த அணியில் 9-10 வீரர்கள் சாம்பியன்ஷிப்பில் வெற்றிப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே எப்படி வெற்றிப் பெறுவதெனத் தெரியும். அதுதான் எங்களது நோக்கமும் என்றார்.

 பேட்மிண்டன்: ரஜாவத் வெற்றி

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளார்கள். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சி உடன் மோதினார். 

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரஜாவத் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் பிரியான்ஷு ரஜாவத், பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் உடன்  மோதுகிறார்.

வருண் சக்கரவர்த்திக்கு பாராட்டு 

கே.கே.ஆர். அணியில் 2020-ல் அறிமுகமான வருண் சக்கரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சினால் இந்திய அணிக்கும் தேர்வானார். கே.கே.ஆர். அணி கடந்தாண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி இருந்தார்கள். சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் வருண் சக்கரவர்த்தி முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் சுனில் நரைன் பேசியதாவது: பல ஆண்டுகளாக நாங்கள் எங்களை நிரூபித்து வருகிறோம். நாங்கள் கூட்டாக நன்றாக பந்து வீசுகிறோம். வருண் சக்கரவர்த்தி எங்கள் பக்கம் இருப்பது எப்போதும் நல்லது. நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றை, அழுத்தத்தை வருண் எப்போதும் தொடர்ச்சியாக செய்கிறார். கே.கே.ஆர். அணி தனது முதல் போட்டியில் ஆர்.சி.பி.யை மார்ச்.22இல் எதிர்கொள்கிறது. 71 ஐ.பி.எல். போட்டிகளில் 83 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எகானமி 7.56ஆக இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து