முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் பாலத்தை தரிசித்தேன்: பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      பொது
Modi 2024-12-20

Source: provided

ராமேஸ்வரம்: “இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமநவமி நாளில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியமும், ராம்லாலாவின் சூரிய திலகத்தை தரிசனம் செய்யும் பாக்கியமும் கிடைத்தது.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

பாம்பனில் அமைந்துள்ள பழைய ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டது. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அனுராதபுரத்திலிருந்து  நேற்று காலை இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு, நண்பகல் சுமார் 12.20 மணி அளவில் மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு வந்தடைந்தார்.

பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணையமைச்சர் முருகன், மாநில அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், எம்.பி நவாஸ்கனி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், கார் மூலம் பாம்பனில் உள்ள நெடுஞ்சாலை பாலத்துக்கு சென்றார். மண்டபத்தில் இருந்து பாம்பன் சாலை பாலம் வரையிலான சாலையின் இருபுறமும் மக்கள் மற்றும் பா...வினர் திரண்டு, அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் 1 மணியளவில் பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து ரயில் தூக்குப் பாலத்தை திறந்து வைத்தார். பின்னர், ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

முன்னதாக, இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி வந்தார். அப்போது கடலில் அமைக்கப்பட்டுள்ள ராமர் பாலத்தை ஹெலிகாப்டரில் இருந்து பாரத்ததையும், ராம நவமி நாளான இன்று (நேற்று) அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி திலக வடிவில் படர்ந்த நேரமும் ஒரே நேரத்தில் நடந்ததையும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு நெகிழ்ந்தார்.

அந்தப் பதிவில் பிரதமர் மோடி, “இலங்கையிலிருந்து திரும்பும் வழியில், ராமநவமி நாளில் ராமர் சேதுவை தரிசனம் செய்யும் பாக்கியமும், ராம்லாலாவின் சூரிய திலகத்தை தரிசனம் செய்யும் பாக்கியமும் ஒருசேர கிடைத்தது. பகவான் ஸ்ரீராமரின் அருள் நம் அனைவர் மீதும் நிலைத்திருக்க பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து