தின பூமி
முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி இன்னுமே ஆபத்தானவர்: ஆஸி. முன்னாள் கேப்டன் கருத்து

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      விளையாட்டு
Ricky-Ponting 2023-10-17

Source: provided

மும்பை : ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர் தான் என  பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். 

சென்னை 9 வது இடம்...

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 19 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ள இந்த ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. 5 முதல் 10 இடங்களை வரை முறையே கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான், மும்பை, சென்னை, ஐதராபாத் அணிகள் உள்ளன. நடப்பு ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி 1 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. சென்னை அணியின் தோல்விக்கு பேட்டிங் முக்கிய காரணமாக உள்ளது.

ஓய்வு கோரிக்கை...

அதிலும் குறிப்பாக அதிரடியாக ஆடக்கூடிய டெத் ஓவர்களில் ரன்கள் குவிக்காதது மிக முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு டோனி அதிரடியாக விளையாடாமல் இருப்பதே முக்கிய காரணம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக அவர் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்துகள் வலுத்து வருகின்றன.

மோசம் அடையவில்லை...

இந்நிலையில், ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர் தான் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, டோனியின் விக்கெட் கீப்பிங் மோசம் அடையவில்லை. எனக்கு தெரிந்த ஒன்று என்னவென்றால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவர் கீப்பராக எதையும் தவறவிடவில்லை. எப்போதும் போல அவர் சிறப்பாக இருந்தார். 

ஆபத்தானவர்...

நீங்கள் சி.எஸ்.கே அணி குறித்து எதையும் விவாதிக்க போவது இல்லை. ஏனென்றால், அவர்கள் இங்கு நிறைய சாதித்திருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக சிறந்த பயிற்சி பெற்று இருக்கிறார்கள். எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கிறார்கள். டோனி சில பந்துகளை சந்தித்து விளையாடக்கூடிய மிகச்சிறந்த பால்-ஸ்ட்ரைக்கராக இருக்கிறார். கடைசியில் 10 முதல் 12 பந்துகளை சந்தித்து விளையாடக்கூடிய வகையில் தன்னை சில ஆண்டுகளாக சுருக்கி கொண்டு இருக்கிறார். ஐ.பி.எல். தொடரில் டோனி இன்னுமே ஆபத்தானவர்தான். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து