முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வக்ப் மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனு தாக்கல்

திங்கட்கிழமை, 7 ஏப்ரல் 2025      தமிழகம்
Supreme-Court 2023-04-06

Source: provided

சென்னை : வக்ப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வக்ப் சொத்துகளின் நிர்வாகத்தை சீரமைக்கும் நோக்கில், கடந்த 1995-ஆம் ஆண்டின் வக்ப் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இரு நாள்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்தார். வக்ப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோர் மட்டுமே வக்ப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி, ஆம் ஆத்மி தரப்பிலிருந்து அமனத்துல்லா கான் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மசோதாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் வாதிடுகிறார். மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து