முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா கல்லூரியில் ரூ.44.50 கோடி மதிப்பில் புதிய விடுதிக் கட்டிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-3 2024-04-14

Source: provided

சென்னை : சென்னை, சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில்  ரூ.44.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய விடுதிக் கட்டிடத்தை  முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (ஏப். 14) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் பத்து தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டிடத்தை திறந்து வைத்தார். 

தமிழ்நாட்டின்  பிற  மாவட்டங்களிலிருந்து உயர்கல்வி பயில சென்னைக்கு வருகை தரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கிக் கல்வி பயில ஏதுவாக, சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி கட்டப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் 15.12.1961 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதுவரையில் சுமார் 25,000 மாணவர்கள் அந்த விடுதியில் தங்கி உயர்கல்வி பெற்று பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சென்னை, எம்.சி. ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் சமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதிக் கட்டிடம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னையில் உள்ள பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பொறியியல், தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் துறைகளில் பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருவதால் அவர்களது தங்குமிடத் தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களது திறனை மேம்படுத்தவும் எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக மாணவர் விடுதிக் கட்டிடம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் 12.7.2023 அன்று அடிக்கல் நாட்டினார். 

முதல்வர் ஸ்டாலின் 29.3.2025 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக எம்.சி. ராஜா விடுதி வளாகத்தில் 10 தளங்களுடன் 44.50 கோடி ரூபாய் செலவில் விடுதி கட்டி முடிக்கப்பட்டு, நல்லிணக்கத்தை போற்றும் வண்ணம், சமத்துவ நாளான அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி மாணவர்களின் நலனுக்காக இந்த விடுதி திறக்கப்படும் என்றும், இக்கூட்டத்திற்கு வருகை புரிந்திருக்கக்கூடிய நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் அனைவரும் இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து