முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனிக்கு கிளார்க் புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      விளையாட்டு
Maikal 11-04-2025

Source: provided

லக்னோவில் நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே. அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங், ரன் அவுட், கேப்டன்சி (தலைமைப் பண்பு), பேட்டிங் என அசத்திய டோனிக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. ஐ.பி.எல். வரலாற்றில் விக்கெட் கீப்பராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் நபராக டோனி சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து மைக்கேல் கிளார்க் கூறியதாவது: டோனி களத்தில் இருந்தால் சப்தம் அதிகமாகத்தான் இருக்கும். அவரது கீப்பிக் என்னை வியப்படைய செய்யவில்லை. நான் முன்னமே சொன்னதுதான் இப்போதும் அவர்தான் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர். நீண்ட காலமாக டோனி தொடர்ச்சியாக இப்படி இருப்பது மிகவும் பெரிய விஷயம். இன்று அவரது தலைமைப் பண்பும் மிளிர்ந்தது. இன்றைய இரவின் சிறந்த விஷயம் என்னவென்றால் டோனியின் கேப்டன்சி தான் (தலைமைப் பண்பு). சூழ்நிலையை சரியாகக் கணித்து சுழல்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினார். இதை அவரது வாழ்நாள் முழுவதும் செய்துள்ளார். டோனியின் அனுபவமே இன்று வெற்றிக்கு உதவியது என்றார்.

_________________________________________________________________________________

அனைவருக்கும் நன்றி: ஷேக் ரஷீத்

ஐ.பி.எல். தொடரில் லக்னோவில்  நடைபெற்ற 30-ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்  சென்னை அணி  5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே தரப்பில் ஷேக் ரஷீத் அறிமுக வீரராக களம் கண்டார். அவர் 19 பந்தில் 27 ரன் எடுத்து அவுட் ஆனார். 

இந்நிலையில், சி.எஸ்.கே. நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் ஷேக் ரஷீத் கூறியதாவது, 2 ஆண்டுகளுக்கு பின்னர் எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். ஆனால், ஒரு தவறான ஷாட்டால் அவுட் ஆகி விட்டேன். அடுத்த முறை நிச்சயம் தவறை திருத்தி கொள்வேன். இனி வரும் ஆட்டங்களில் நன்றாக செயல்படுவேன் என நினைக்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள். இவ்வாறு அவர் கூறினார்.

_________________________________________________________________________________

பேட்ஸ்மேனின் பேட்டை அளக்க முடிவு

18-வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐ.பி.எல். போட்டிகளில், இனி பேட்ஸ்மேனின் பேட் அளவு அளக்கப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. பேட்ஸ்மேன் பயன்படுத்தும் பேட் -ஐ நடுவர்கள் இனி அளப்பார்கள்; பேட்ஸ்மேன்கள் முதல் பந்தை சந்திக்கும் முன்னர் நான்காம் நடுவர் பேட் -ஐ அளப்பார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு போட்டியின் நடுவே பில் சால்ட், ஹெட்மெயர், பூரன், பாண்டியா ஆகியோர் பேட்டின் அளவை நடுவர்கள் கண்காணித்த நிலையில், இனி அனைவருக்கும் விதியை பின்பற்ற பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது .

_________________________________________________________________________________

நாய் வடிவிலான கேமரா ரோபோ 

ஐ.பி.எல். தொடரின் ஒளிபரப்பு குடும்பத்தில், புதிதாக நாய் வடிவிலான கேமரா இயந்திரம் (ரோபோ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் இந்த இயந்திர நாய் விளையாடும் விடியோவை ஐ.பி.எல். தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்து, ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. அதில், வீரர்கள் செய்யும் சைகளைகளை செய்து அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதோடு மட்டுமின்றி, அவர்கள் எதிர்பாராத அசைவுகளையும் செய்து ஆச்சரியப்படுத்துகிறது.

கிரிக்கெட் திடல் முழுவதும் வலம் வரும் இந்த இயந்திர நாயின் முகத்திலும் முதுகிலும் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதனால், வீரர்களின் செயல்கள் அனைத்தும் நாயின் பார்வையிலும் விடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. வீரர்கள் பேசிக்கொண்டும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் இயந்திர நாய், அதனையும் படம் பிடித்துள்ளது.

_________________________________________________________________________________

காயத்தால் லோக்கி பெர்குசன் விலகல்

நியூசிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான லோக்கி பெர்குசன் இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் முதல்முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் கடந்த சனிக்கிழமை (ஏப். 12) நடந்த  போட்டியின்போது இரு பந்துகள் மட்டுமே வீசிய லோக்கி பெர்குசன் தனது இடது தொடைப் பகுதியில் வலி ஏற்பட்டதால் போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில், அவருக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டதால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடமாட்டார் என அணியின் பந்துவீத்து பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்தார். “பெர்குசன் இந்தத் தொடரிலிருந்து விலகுகிறார். அவர் மீண்டும் இந்த ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது மிகவும் கடினம். அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

_________________________________________________________________________________

அக்‌ஷர் படேலுக்கு அபராதம்

ஐ.பி.எல். தொடரில் டில்லியில்  நடைபெற்ற போட்டியில் டில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் டில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது. இந்த போட்டியில் மெதுவாக பந்துவீசியதன் காரணத்தினால் டில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்‌ஷர் படேலுக்கு பி.சி.சி.ஐ. தரப்பில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பி.சி.சி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டாடா ஐ.பி.எல். தொடரின் 29-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டில்லி கேபிடல்ஸ் விளையாடியது. இந்தப் போட்டியில் டில்லி அணியின் கேப்டன் அக்‌ஷர் படேல் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், டில்லி அணிக்கு விதி 2.22-ன் படி ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து