முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      உலகம்
Israel

Source: provided

டெல்அவிவ் : காஸா நகரத்திலுள்ள மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், மருத்துவப் பணியாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.

காஸா மீதான இஸ்ரேலின் போரில் தங்குமிடங்களை இழந்தும், படுகாயமடைந்தும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் முவாஸி பகுதியிலுள்ள குவைத்தி ஃபீல்ட் மருத்துவமனையில் தஞ்சமடைந்து வந்தனர். இந்நிலையில், நேற்று (ஏப்.15) அந்த மருத்துவமனையின் வடக்கு வாயிலின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கு பணிப்புரிந்து வந்த மருத்துவப் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் பணிப்புரிந்த மருத்துவர்கள். குறிப்பாக இருவரின் உடல்நிலை அபாய நிலையில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, கடந்த 2023-ல் துவங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரில் காஸா நகரத்திலுள்ள ஏராளமான மருத்துவமனைகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்கள் நடத்தி தகர்த்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் அனைத்திற்கும் அந்த மருத்துவமனைகளினுள் ஹமாஸ் படையினர் பதுங்கியிருந்தாகவும் அதனால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. இதனை முற்றிலும் மறுத்த அந்நகர மருத்துவப் பணியாளர்கள் இஸ்ரேல் தொடர்ந்து போர் குற்றங்களில் ஈடுபட்டு காஸாவின் சுகாதார வழிகளை முற்றிலும் அழித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து