முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவத்தில் வீரர்கள் பற்றாக்குறை : பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      இந்தியா
Army-camp 1

Source: provided

புதுடெல்லி : இந்திய ராணுவம் தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் பாராளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில், கரோனா காலத்தில் ஆட்சேர்ப்பு பணி நிறுத்திவைக்கப்பட்டதால் இந்த சிக்கலை சந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனா எல்லைப் பகுதிகளில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை இந்திய ராணுவம் கையாண்டு வரும் சூழலில், ஆள்பற்றாக்குறை விவகாரம் வெளிவந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, இந்திய ராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை 12.48 லட்சமாக உள்ளது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட ஒரு லட்சம் குறைவான வீரர்களே உள்ளனர்.அக்டோபர் 1, 2024 நிலவரப்படி, அனுமதிக்கப்பட்ட படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 11,97,520 ஆகும். ஆனால், படைகளில் இருப்பவர்களின் எண்ணிக்கை 11,05,110 ஆகும்.ஜூலை 1, 2024 நிலவரப்படி, மொத்தம் 50,538 உயர்நிலை அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், 42,095 அதிகாரிகளே உள்ளனர். சுமார் 16.71 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

சீனாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டாலும், கிழக்கு லடாக்கில் 50,000 வீரர்கள் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதாக, ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் மேலும் 15,000 வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக ராணுவ ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை. ஓராண்டுக்கு 60,000 வீரர்கள் ஓய்வு பெறுகிறார்கள். இதனால் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1.2 லட்சம் வீரர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு முதல் அக்னிபத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 40,000 வீரர்கள் தற்போது ராணுவத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ராணுவத்தில் ஏற்பட்டுள்ள வீரர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அக்னிபத் ஆட்சேர்ப்பு திட்டத்தை பாதுகாப்பு அமைச்சகம் நம்பியுள்ளது. அக்னிபத் திட்டத்தின் மூலம் வீரர்களின் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் என்றும், அதிகாரிகளின் பற்றாக்குறையை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து