முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல : அமெரிக்க அதிபர் விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      உலகம்
Trump-Zelensky 2024-11-16

Source: provided

வாஷிங்டன் : ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. சுமார் 3 ஆண்டுகளாகியும் உக்ரைனில் அழுகுரல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்தநிலையில், உக்ரைன் - ரஷ்யா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு நகர்விலும் ஈடுபடும் முன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனை நேரில் பார்வையிட்டு அங்குள்ள கள யதார்த்தத்தை உணர்ந்து முடிவெடுக்க ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி, “உக்ரைன் விவகாரம் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தை அல்லது முடிவுக்கு முன், உக்ரைனுக்கு வந்து இங்குள்ள மக்களை, போராளிகளை, வீரர்களை, தேவாலயங்களை, மருத்துவமனைகளை, போரில் காயமுற்ற அல்லது மரித்த குழந்தைகளைக் கண்ணால் பார்த்துவிட்டு அதன்பின் செயல்படுங்கள்” என்று பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, இது குறித்து தமது ‘ட்ரூத்’ சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ள டிரம்ப் கூறியிருப்பதாவது, “இந்த எதிர்பாரா அசம்பாவிதத்துக்கு பிள்ளையார்சுழி போட அனுமதித்ததன் மூலம் அதிபர் ஸெலென்ஸ்கியும் ஜோ பைடனும் கோரமானதொரு காரியத்தை செய்துவிட்டனர். இதனை தொடங்கவிடாமல் தடுத்திருப்பதற்கு ஏராளமான வழிகள் இருந்தபோதிலும், இந்த சண்டை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. ரஷ்யா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல. எனினும், அழிவை நிறுத்துவதற்காக நான் தொடர்ந்து செயலாற்றி வருகிறேன். இப்போது இதனை விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார். ஒருவேளை கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியிருப்பின் ரஷ்யாவின் இந்த தாக்குதலை தடுத்திருப்பேன் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து