முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழங்குடியின மக்களுக்காக இந்த அரசு எப்போதும் துணை நிற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      தமிழகம்
CM-4 2024-04-14

Source: provided

சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். 

அப்போது அவர் பேசியதாவது:- இன்று (நேற்று) வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தீண்டாமை குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள். அதனால்தான் திராவிட மாடல் ஆட்சியிலே தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம்.

இன்று (நேற்று) காலையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம். சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் வேகமாக நகர வேண்டும். இந்த மண்ணில் இருக்கிற ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம்.

புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடித்துக் கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம். அவர் எழுதிய சாதிய ஒழிக்க வழி என்ற நூலை 1930-ம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறோம்.

சமூக நீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் புரட்சியாளர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மக்களவையில் 2 முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதிதிராவிடர், பழங்குடியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனை குறித்து 6,977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் அன்று டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 174 மாணவர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் இது திராவிட மாடல் அரசின் சாதனை.

மாணவர்களின் கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையில் விடுதிகளையும் கட்டி இருக்கிறோம். மாணவர்களின் முன்னேற்றம் என்பது கண்கள் மாதிரி என்றால், பெண்களின் முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பு மாதிரி. அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்த சமூகத்தின் பெண்கள் முன்னேற்றத்தை வைத்து அளவிடுகிறேன் என்று சொன்னார்.

அதனால்தான் பெரிதும் விவசாய தொழிலாளர்களாக இருக்கிற ஆதிதிராவிட மகளிரை நில உடமையாளராக மாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு 'நன்னி லம்' என்ற மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அண்ணல் அம்பேத்கரின் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 3,950 தொழில்முனைவோருக்கு ரூ.630 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தொல் குடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நான் உறுதியோடு சொல்லிக் கொள்ள விரும்புவது ஆதிதிராவிட மக்களின் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும். சாதியின் பெயரால் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் நுழையக் கூடாது என்பதை எல்லாம் நம்முடைய கொள்கைகளால் போராட்டங்களால் இடைவிடாத பரப்புரைகளால் உடைத்து நொறுக்கி விட்டோம். கல்வியும், படிப்பும், வேலையும், பதவியும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தி இருக்க கூடிய மாற்றம்.

சாதிதான் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி. அந்த ஆயிரம் ஆண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர வைப்பதற்கு தான் இன்று பாடுபடுகிறோம். இந்த ஆட்சிதான் பொற்காலம். நமது பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும். வெறுப்பு அரசியலை விட, அன்பை விதைக்க கூடிய அரசியல்தான் வலுவானது. ஆற்றல் வாய்ந்தது என்று நான் நம்புகிறேன். தமிழ், தமிழர் என்ற ஒன்றுதான் நம்மை ஒன்றிணைக்கும். சமூக நீதி, பொதுவுடமை சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க புரட்சியாளர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம். ஜெய்பீம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து