முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி.: தலைவராக கங்குலி நியமனம்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      விளையாட்டு      தேர்தல்
Ganguly 2023-08-26

Source: provided

ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கங்குலி தலைமையிலான இந்த கமிட்டியில் வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா), ஹமித் ஹசன் (ஆப்கான்), தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்), பவுமா [தென் ஆப்பிரிக்கா], ஜோனதன் டிராட் (இங்கி.,] ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கமிட்டி சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறை மாற்றம், ஆட்டத்தின் நீண்ட கால முன்னேற்றத்துக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஐ.சி.சி.க்கு பரிந்துரை செய்யும். கங்குலி கடந்த 2021ம் ஆண்டில் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

__________________________________________________________________________________________________________

வேட்டி-சட்டையில் சி.எஸ்.கே. வீரர்கள்

தமிழ் புத்தாண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேட்டி-சட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை சென்னை அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

தோனி, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் வேட்டி-சட்டையுடன் இருக்கிறார்கள். மேலும் அதில், " சவால்களை முறியடித்து ஒற்றுமையுடன் ஒன்றிணைவதற்கு புத்தாண்டு பலம் தரட்டும்! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!" என்ற தலைப்புடன் பதிவிட்டுள்ளது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

__________________________________________________________________________________________________________

அக்சர் படேலுக்கு அபராதம் 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில்  முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. 

இதைத் தொடர்ந்து 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த ஆட்டத்தில் டெல்லி அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை. இதனால் அந்த அணியின் கேப்டனான அக்சர் படேலுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

__________________________________________________________________________________________________________

லக்னோ அணியில் மயங்க் யாதவ்?

ஐ.பி.எல். தொடர் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த 3 இடங்கள் முறையே டெல்லி, பெங்களூரு, லக்னோ ஆகிய அணிகள் உள்ளன.

இந்நிலையில் லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவர் காயம் காரணமாக அணியுடன் இடம்பெறவில்லை. அவர் பெங்களுருவில் உள்ள தேசிய அகாடமியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மயங்க் லக்னோ அணியுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது லக்னோ அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. இவர் அணியின் இடம்பெற்றால், ஆவேஸ் கான் நீக்கப்படலாம். 

__________________________________________________________________________________________________________

மும்பை அணியின் புதிய சாதனை

ஐ.பி.எல். தொடரின் 29-வது லீக் ஆட்டம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும். இதன்மூலம் ஐ.பி.எல்.-ல் இதுவரை மும்பை அணி 200 ரன்களுக்கு மேல் குவித்த ஒரு போட்டியில் கூட தோற்றதே இல்லை என்ற சாதனையை மும்பை அணி தக்க வைத்துள்ளது. மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்த 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து