முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம் : துணை முதல்வர் உதயநிதி புகழாரம்

திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2025      தமிழகம்
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  புகழாரம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:- ஒடுக்கப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு கல்வி-ஒற்றுமை-போராட்டமுமே நிரந்தவழி என முழங்கியவர். அறிவுச் சாட்டையைச் சுழற்றி பேதங்களின் எலும்புகளை நொறுக்கிய மாமேதை. இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று!

இந்நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தவர் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின். கல்வியை குலைத்து, மாணவர்கள் மத்தியில் பிற்போக்குத்தனத்தை நிலைநிறுத்தும் கனவுலகில் மிதந்தவர்களுக்கு அண்ணல் இயற்றிய சட்டத்தின் வழியில் பல்கலைக்கழகங்களை காத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

அண்ணலின் கருத்துகள் கற்றறிவதற்கு மட்டுமல்ல, காலச் சூழலுக்கு ஏற்ப களத்தில் செயல்படுத்தி வெற்றியடைவதும் முக்கியம். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் அமைப்பதே நமது இறுதி இலக்கு. அதற்கு அம்பேத்கரின் கொள்கை ஒளி ஏந்தி அறியாமை இருள் அகற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து