முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் சுதந்திரமாக செயல்பட கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் ரகுபதி கருத்து

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      தமிழகம்
Raghupathi 1

புதுக்கோட்டை, சுப்ரீம் கோர்ட் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்திப்பில், கவர்னர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து 9 நாள்களுக்குப் பிறகு, அதனை துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் தற்போது விமர்சித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் சுதந்திரமாகச் செயல்படக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள். அதற்காகத்தான் துணைக் குடியரசுத் தலைவரை பேச வைத்திருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக வக்ப் சட்டத் திருத்த நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் மீது இப்படியொரு விமர்சனத்தை வைக்கிறார்கள். இன்னும் முழுமையான தீர்ப்பு வரவில்லை. நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களால் பாதிக்கப்படுவோம் என நினைக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் கூட அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம். இது ஜனநாயக நாடு.

மத்திய அரசு தங்களின் கட்டுப்பட்டிலுள்ள அம்சங்களில் முடிவெடுப்பதை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. ஆனால் கல்வி பொதுப்பட்டியலில் தான் உள்ளது. கல்வியில் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டாமா? எங்களின் கருத்துகளைக் கேட்க வேண்டாமா? என்றார் ரகுபதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 9 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 11 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து