முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார் டொனால்டு டிரம்ப்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      உலகம்
Trump 2024-12-21

Source: provided

வாஷிங்டன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் பங்கேற்க ரோம் செல்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த 21ம் தேதி காலமானார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார். போப் பிரான்சிஸ் மறைவுக்கு உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் இறுதிச்சடங்கு 26-ம் தேதி(சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. அதன்பின்னர், உலக நாடுகள் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கபப்ட்டு புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார். இதற்காக அவர் வெள்ளிக்கிழமை காலை தனிவிமானம் மூலம் இத்தாலியின் ரோம் நகருக்கு செல்கிறார். அதன்பின்னர், சனிக்கிழமை நடைபெற உள்ள போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் டொனால்டு டிரம்ப் பங்கேற்கிறார். இறுதிச்சடங்கிற்குப்பின் சனிக்கிழமை மாலை அவர் அமெரிக்கா திரும்புகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து