முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      விளையாட்டு
Sri-Lanka-win 2024-03-31

Source: provided

இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களும் கொழும்புவில் நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும். 

இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சமாரி அத்தபத்து கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி விவரம்: சமாரி அத்தபத்து (கேப்டன்), விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரமா, நிலாக்ஷி சில்வா, கவிஷா தில்ஹாரி, அனுஷ்கா சஞ்சீவனி, ஹாசினி பெரேரா, பியூமி வத்சலா, மனுடு நாணயக்காரா, டெவ்மி விஹங்கா, இனோகா ரனவீரா, இனோஷி பெர்னாண்டோ, ஹன்சிமா கருணாரத்னே, ராஷ்மிகா செவ்வந்தி, மல்கி மதரா, சுகந்திகா குமாரி, அச்சினி குல்சூரியா. 

___________________________________________________________________________________________

ஐ.பி.எல். குறித்து திலக் வர்மா 

நடப்பு ஐபிஎல் தொடரில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறும் லீக் சுற்றின் 41-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டிக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் திலக் வர்மா தனியார் தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் பேசுகையில்,  நான் ரோஹித் சர்மாவுக்கும் சூர்யகுமார் யாதவுக்கும் அடிக்கடி சொல்வது ஒன்றுதான். நான் இன்னும் கோப்பை வென்ற உணர்வை அனுபவிக்கவே இல்லை.  இந்த ஆண்டு நாங்கள் முழு மனதோடு போராட தயாராக இருக்கிறோம். 

ஹார்திக் பாண்டியா உடன் நல்ல நட்புறவு இருக்கிறது. டி20 அறிமுகத்தின் போது அவரிடமிருந்து தொப்பியைப் பெற்றது மறக்கமுடியாத தருணம்.   நான் 2022 ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸில் சேர்ந்தேன். இது எனக்கு நான்காவது சீசன். பல மூத்த வீரர்களுடனும், உள்நாட்டு வீரர்களுடனும் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது நம்பிக்கையை அதிகரிக்கிறது. ஐ.பி.எல்.லில் சர்வதேச தரத்தில் இருக்கும் பலரை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது என்றார்..

___________________________________________________________________________________________

பஹல்காம் சம்பவம் குறித்து கோலி

ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 28 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல்களையும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்தத் தாக்குதல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்த செய்தி வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அமைதியும், வலிமையும் கிடைக்க வேண்டும் எனவும் இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். இதேபோன்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ள பதிவில்,  பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நினைத்துக்கூட பார்க்க முடியாத வேதனையை அனுபவித்து வருகின்றனர். இந்த மாதிரியான நேரத்தில் நாம் அவர்களுடன் துணை நிற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

___________________________________________________________________________________________

ஐ.பி.எல்: பட்டாசுகள் வெடிக்க தடை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற மும்பை - ஐதராபாத் இடையிலான லீக் ஆட்டத்தின் போது பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரர்கள், நடுவர்கள் என அனைவரும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த போட்டியின் போது, சியர்லீடர்கள் நடனமாடக்கூடாது எனவும், பட்டாசுகள் வெடிக்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்னர் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

___________________________________________________________________________________________

ஆர்.சி.பி. அணி புதிய சாதனை

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன. இதன் காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். 

அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 19 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்.சி.பி. அணி படைத்துள்ளது. அந்த அணிக்கு அடுத்தபடியாக 18.3 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்திலும், 17 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து